என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதியமான் வேளாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- பால கிருஷ்ணன் மற்றும் கூத்தரசன், கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் பானுமதி மற்றும் அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அறங்காவலர் டாக்டர் லாஸ்யா ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், டாடா பவர் கம்பெனியின் மூத்த ஆலோசகர் ஜெகநாதன் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் முனைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பதக்கங் களும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில், கல்லூரி மேலாளர் குப்புசாமி, நிர்வாக அலுவலர் விஜயேந்தரன், அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, பால கிருஷ்ணன் மற்றும் கூத்தரசன், கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாண,வ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.






