search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேல்முருகன் வள்ளி தெய்வசேனா கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
    X

    வேல்முருகன் வள்ளி தெய்வசேனா கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா

    • மாங்கனி மலை ஸ்ரீவே ல்முருகன் பூப்பல்லக்கில் அலங்கரி க்கப்பட்ட தேரில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார்.
    • விழாவின் முக்கிய நாளான ஆடிக்கிருத்திகை இன்று முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் காலை முதலே தொடங்கியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் கிராமத்தில் மாங்கனி மலை மீது ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா கோவில் அமைந்துள்ளது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் 54-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மாங்கனி மலை ஸ்ரீவே ல்முருகன் பூப்பல்லக்கில் அலங்கரி க்கப்பட்ட தேரில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார்.

    அப்போது மாக்கி ரெட்டிகொட்டாய் சரவணா குழுவினரால் சிலம்பாட்டம், காவடி ஆட்டம் மற்றும் கிருஷ்ணன் பாண்டுரங்கன் குழுவினரால் நையாண்டி மேளம், பம்பை வைத்தியம், கரகாட்டம் உள்ளிட்டவை நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான ஆடிக்கிருத்திகை இன்று முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் காலை முதலே தொடங்கியது. ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத சிறப்பு அலங்காரத்தில் பக்த ர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    இதே போல், காலை 7 மணியளவில் சந்தூர் மாரியம்மன் கோயில் அருகே ஸ்ரீ வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்ட நிகழ்ச்சியும், பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல், காளை மாட்டின் தலைமீதும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காலை 11 மணியளவில் பக்தர்கள் சலக்கு போட்டு கொண்டும், பால்காவடி, புஷ்பகாவடி, மயில் காவடி, சிலம்பாட்டம் கரகாட்ட த்துடன் ஊர்வலமாக முருகன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் அருகே பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவை வழங்க பட்டன. போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×