என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- தி.மு.க.சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம், நேற்று நடைபெற்றது.
- இக்கட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான ஆனந்தய்யா தலைமை தாங்கினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகர மேற்கு பகுதி தி.மு.க.சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம், நேற்று நடைபெற்றது.
ஓசூர்-பாகலூர் சாலையில், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் ஓட்டல் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான ஆனந்தய்யா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநகர தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.
மேலும் இதில், துணை செயலாளர் ரவிகுமார், கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ் வரன், சென்னீரப்பா, மற்றும் மேற்கு பகுதி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






