என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னால் சென்ற லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் சாவு
- உடனே விபத்தில் சிக்கிய 2 பேரை பத்திரமாக மீட்டனர்.
- அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் கோபால் உயிரிழந்தார்.
சூளகிரி,
உடுமலைபேட்டையில் இருந்து ஓசூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை கோபால் என்பவர் ஓட்டி வந்தார். உடன் மணி என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் இந்த கண்டெய்னர் லாரி இன்றுகாலை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அலகுபாவி என்கிற பகுதியில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் லாரியின் முன்பகுதி உருக்குலைந்தது. லாரியின் இருந்த 2 ேபரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விபத்தில் சிக்கிய 2 பேரை பத்திரமாக மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் கோபால் உயிரிழந்தார்.
இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ் சாலையில் 4 மணி ேநரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






