search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே குமரக்குன்று முருக பெருமானின் ஆடி கிருத்திகை தேர் திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் குமரக்குன்று ஸ்ரீ முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையும், தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானத்தை குரு மார்டன் வே பிரிட்ஜ் உரிமையாளர்கள் அரிமா திருப்பதி, அரிமா பிரேமசுதா தம்பதியினர் வழங்கிய காட்சி.

    மத்தூர் அருகே குமரக்குன்று முருக பெருமானின் ஆடி கிருத்திகை தேர் திருவிழா

    • குமரக்குன்று ஸ்ரீ முருக பெருமானின் ரத உற்சவ அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழா குழுவினர் சார்பில் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம் பதிகமலாபுரம் ஆற்றங்கரை யில் குமரக்குன்று ஸ்ரீ முருகபெருமானின் 66-ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை தேர் திருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

    இத்தேர் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் மாதம்பதி, கமலாபுரம், ஒட்டப்பட்டி கவுண்டனூர், புளி யாண்டப்பட்டி, மேட்டுக் கொட்டாய் (கோணிக்கால்) உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புஷ்பக் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, ஆறுப்படை காவடி, பன்னிரெண்டு படைக் காவடி, அத்துடன் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும், புஷ்பரதம், முத்தரம், பவளரதம், கரம் எடுத்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும் எழுமிச்சை பழம் கோர்த்தும் பக்தி பரவசத்துடன் குமர குன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மூன்று பக்தர் தங்களது மார்பு மீது மஞ்சள் இடித்தும், அதேப்போல் ஸ்ரீ முருக பெருமான் ஆற்றங்கரையில் உள்ள தெப்ப தேர் விடுதலும், விமான செடல் மூலம் பக்தர் ஒருவர் தனது முதுகில் இரும்பு கொக்கியால் கோர்த்து தொங்கியவாறு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை காட்டுதல், பூ மாலையிடுதல், குழந்தைகளை தூக்கி கொண்டு ஆசிர்வாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    குமரக்குன்று ஸ்ரீ முருக பெருமானின் ரதஉற்சவ அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் மத்தூரில் உள்ள பெங்களுரு-திருவண்ணாமலை தேசிய நெடுச்சாலையில் செயல்பட்டு வரும் குரு மார்டன் வேபிரிட்ஜின் உரிமையாளர்களான அரிமா திருப்பதி, அரிமா பிரேமசுதா தம்பதியினர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

    திருவிழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா குழுவினர் சார்பில் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாதம்பதி கமலாபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×