என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளத்தில் மூழ்கி பெண் சாவு
- சுஜாதா அண்ணா நகரில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே தேர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுஜாதா (வயது37). சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணபட்ட இவர் கடந்த 5-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன முருகேசன், தனது மனைவியை காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். அப்போது சுஜாதா அண்ணா நகரில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து முருகேசன் பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






