என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இவர்களை, தலைமை யாசிரியர் பொன். நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில், 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ரேகா, மானிஷா ஸ்ரீ ஆகியோரும், ஆண்கள் பிரிவில் இளைய சந்திரன், தர்ஷன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    இதே போல், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் யாழினி, சமிக்க்ஷா, ஆண்கள் பிரிவில் கிஷோர், லோகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இவர்களை, தலைமை யாசிரியர் பொன். நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • தேன்கனிக் கோட்டை தாலுகா காரண்டப் பள்ளி அஞ்செட்டி தாலுகாவில் அஞ்செட்டி உள்பட 8 இடங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • இந்த குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை சம்பந்தபட்ட தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன் பெறலாம்.

    கிருஷ்ணகிரி,   

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களிடம் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டை களில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    அதன்படி கிருஷ்ணகிரி தாலுகா ஆவல்நத்தம், பர்கூர் தாலுகா கூச்சூர், போச்சம்பள்ளி தாலுகா பாரண்டப்பள்ளி புதூர், ஊத்தங்கரை மூங்கிலேரி, ஓசூர் தாலுகா பெலத்தூர், சூளகிரி தாலுகா அங்கொண் டப்பள்ளி, தேன்கனிக் கோட்டை தாலுகா காரண்டப் பள்ளி அஞ்செட்டி தாலுகாவில் அஞ்செட்டி ஆகிய 8 இடங்களில் நடக்கிறது.

    இந்த குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை சம்பந்தபட்ட தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் திருட முயன்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூர், 

    ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் வருவாய்துறையினர் நேற்று முன்தினம் பாகலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நந்திமங்கலம் அருகே ஏரிக்கரையில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் திருட முயன்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், போலீசாரிடம் ஒப்படைத்தார். பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதேபோல ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி கடந்த, 8-ந் தேதி இரவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது கொடுகூர் கிராமத்தில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது.

    அவரது தகவல் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சோக்காடி ஊராட்சி ஏரி வழியே எண்ணெகொள் கால்வாய் அமைப்பதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்.
    • சிக்கபூவத்தி மற்றும் சோக்காடி ஆகிய ஊராட்சி களில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குதல் ஆகியவை குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றியக் குழுத் தலைவர் அம்சாராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், ஊராட்சி ஒன்றிய சாலைகளை ஊராட்சி சாலைகளாக மாற்ற வேண்டும். அத்தியா வசியமாக தேவைப்படும் இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், சாலைகள் மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சோக்காடி ஊராட்சி ஏரி வழியே எண்ணெகொள் கால்வாய் அமைப்பதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும். சிக்கபூவத்தி மற்றும் சோக்காடி ஆகிய ஊராட்சி களில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குதல் ஆகியவை குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், முருகன், தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இளம் வயது திருமணம் செய்தாலோ, பெண்களை ஆபாசமாக சித்தரித்தலோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
    • மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், இளம் வயது திருமணம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை தாங்கி னார். சிறப்பு அழைப்பா ளராக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெனிபர், மாணவ, மாணவிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம் கெடுவதோடு, மன நலமும் பாதிக்கின்றன. தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் பல குற்றச் சம்பவங்கள் நடக்கவும் போதைப் பொருள் காரண மாகின்றன. குறிப்பாக மாணவ, மாணவி கள் எக்காரணம் கொண்டும் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

    மற்றவர்கள் பயன்படுத்து வதைப் பார்த்தால், சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது.

    மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும். எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, ஹெல்மெட் அணிந்து, விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். இக்கருத்தை மாலை வீட்டுக்கு சென்று உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

    நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், உங்களுக்கு தேவையான இலவச சட்ட ஆலோ சனையும், தீர்வும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளம் வயது திருமணம் செய்தாலோ, பெண்களை ஆபாசமாக சித்தரித்தலோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பள்ளிக்கு வரும் நீங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்ற விஷயங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்தக் கூடாது.

    நீங்கள் இப்போது கற்றுக் கொண்ட விழிப்பு ணர்வு விஷயங்களை குறைந்தது 10 பேரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். பின்னர் வழக்கறிஞர் கதிரேசன், மாணவ, மாணவி களுக்கு இளம் வயது திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    • முருங்கை கீரை, மொடக்கத்தான் கீரை கலந்த சிறுதானிய ரொட்டிகள் போன்ற பல்வேறு புதுமையான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நிபுணர்கள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தால் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டைக் கொண்டாடவும், சிறுதானிய உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காகவும் வாழ்க்கை முறை பகுதி விரிவாக்கத்தில் சிறுதானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறுதானியங்கள் உணவுப் போட்டி அஞ்செட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் உதவிப் பொது இயக்குநர் ரஞ்சய் குமார் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    இதில் ஐதராபாத் பத்தாவது மண்டலத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் என்.மீரா, கவுகாத்தி ஆறாவது மண்டலத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கதிர்வேல் கோவிந்தசாமி, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன், கிருஷ்ணகிரி மாவட்டட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன் உள்பட பலர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் நடந்த சிறுதானிய உணவுப் போட்டியில், அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டு, போட்டிக்கான சிறுதானியங்கள் சார்ந்த உணவுப் பொருட்களான ராகி பர்ப்பி, சிறுதானிய அல்வா, லட்டு, ராகி பூரி, களி மற்றும் முருங்கை கீரை, மொடக்கத்தான் கீரை கலந்த சிறுதானிய ரொட்டிகள் போன்ற பல்வேறு புதுமையான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

    பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நிபுணர்கள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத் பத்தாவது மண்டல வேளாண்மை தொழிற்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பிரசாத், முதுநிலை விஞ்ஞானி மாலதி, தருமபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் ஜெயந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர். ரஞ்சித், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் வரவேற்றார். முடிவில் மனையியல் தொழில்நுட்பட வல்லுநர் பூமதி நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை மற்றும் உணவை ஆய்வு செய்து போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா மாணவ ர்களிடம் கேட்டறிந்தார்.
    • குடிநீர் பணிகள், சாலை பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணன் டஹள்ளி, கெரிக்கே ப்பள்ளி, சாலமரத்துப்பட்டி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளா ட்சித்துறை சார்பில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும், கண்ணன்டஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி கண்ணன் டஹள்ளி ஊராட்சி, அத்திகா னூர் கிராமத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் (2023-2024) நிதியாண்டு கீழ் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு சம உயர வரப்பு அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    அங்கு பணியாளர்களின் வருகை பதிவேடு, வேலை வழங்கப்பட்ட நாட்கள், ஊதியம் வழங்கப்பட்ட விவரங்களை பார்வை யிட்டார். மேலும் பதிவேடுகளை சரியாக பராமரிக்க பணிதள பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அத்திகானுர் கிராமத்தில் 15 வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் செங்குத்து உறிஞ்சிக் குழியுடன் புதியதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு கால்வாயின் நீளம் அகலம் மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கூச்சூர் தோழனூர் கிராமத்தில் உள்ள 60 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு பைப்லைன் அமைக்கும் பணிகள், மின் இணைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கூச்சூர் கிராமம் ராஜீவ் நகர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை கூடுதல் தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை மற்றும் உணவை ஆய்வு செய்து போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா மாணவ ர்களிடம் கேட்டறிந்தார்.

    இதே போல கெரிகேப்ப ள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களில் வர்ணம் பூசும் பணிகள், சமையல் அறை கட்டுமான பணிகள், சாலை பணிகள், என மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த குடிநீர், சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக கண்ணன்டஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொ றியாளர் பசுபதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமார், துரைசாமி, உதவி பொறியாளர்கள் சாஸ்தா, ஜமுனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஊர்வலமாக சென்று பக்தி பரவசத்துடன் ஸ்ரீ கங்கை குமரன் முருகபெருமானுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிப்பட்டனர்.
    • விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேத்தோட்டம் ஊராட்சி, போக்கம்பட்டி ஸ்ரீகங்கைகுமரன் கோவில் 42-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை தேர் திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் ஸ்ரீகங்கை குமரன் முருகபெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் மார்பு மீது மஞ்சல் இடித்தல், உடல் முழுவம் எழுமிச்சை பழம் கோர்த்தல், இழநீர் இழுத்தல், தேர் இழுத்தல், கரகம் எடுத்தல், சிலம்பாட்டம், மயிலாட்டம், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி ஆறுபடைக்காவடி அலகுத்துதல் ஆகியவைகள் அணி ஊர்வலமாக சென்று பக்தி பரவசத்துடன் ஸ்ரீ கங்கை குமரன் முருகபெருமானுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிப்பட்டனர்.

    இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட முருகபெருமானின் தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் விரதம் இருந்த பக்தர்கள் அருள் வந்த நிலையில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்க்கான ஏற்பாடுகளை பாளேத்தோட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா வேலாயுதம், நிதி நிறுவன உரிமையாளர் வேலு, செயலாளர் குமரவேல், கோவில் தர்மகர்த்தா தணிகாசலம், வைத்திய கவுண்டர், பொருளாளர் குணசேகரன், வார்டு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    விழாவில் விழா குழுவினரால் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் 100-மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார், சிப்காட் பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர்.
    • விசாரித்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என தெரிந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடப்பதாக புகார் வந்ததையடுத்து, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார், சிப்காட் பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர்.

    அப்போது, 2 பேர் இரு சக்கர வாகனங்களில் வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். விசாரித்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என தெரிந்தது.

    மேலும், விசாரணையில் தின்னூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது25) மற்றும் இந்த வாகனங்களை திருடுவதற்கு சாவியை செய்து கொடுத்த தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஷேக் காதர் (33) என்பதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து, பல்வேறு இடங்களில் அவர்கள் திருடிய 20 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முபாராக் (வயது27). இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும், உடல் நிலை சரியில்லாததால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்த பலனும் அளிக்காததால் மனவேதனை அடைந்த முபாராக் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கி நாட்டிற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
    • விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 340 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி 2023-2024-ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 462 மதிப்பில் விளையாட்டு சீருடைகள் மற்றும் ரூ.29 ஆயிரத்து 736 மதிப்பில் தினசரி நாட்டு குறிப்பேடுகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சீருடைகள், நாட்குறிப்பேடு களை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    விழாவிற்கு தருமபுரி வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, பரமசிவம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கி நாட்டிற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் இந்த பள்ளிக்கு கல்வி வளர்ச்சிக்காக ரூ.13 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    • இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ஆம் தேதி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுரை மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, கட்சி தொண்டர்களுடன், ஆட்டோக்களில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் மற்றும் பேனர்களை ஒட்டினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர். வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×