என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்
- தேன்கனிக் கோட்டை தாலுகா காரண்டப் பள்ளி அஞ்செட்டி தாலுகாவில் அஞ்செட்டி உள்பட 8 இடங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- இந்த குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை சம்பந்தபட்ட தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன் பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களிடம் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டை களில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
அதன்படி கிருஷ்ணகிரி தாலுகா ஆவல்நத்தம், பர்கூர் தாலுகா கூச்சூர், போச்சம்பள்ளி தாலுகா பாரண்டப்பள்ளி புதூர், ஊத்தங்கரை மூங்கிலேரி, ஓசூர் தாலுகா பெலத்தூர், சூளகிரி தாலுகா அங்கொண் டப்பள்ளி, தேன்கனிக் கோட்டை தாலுகா காரண்டப் பள்ளி அஞ்செட்டி தாலுகாவில் அஞ்செட்டி ஆகிய 8 இடங்களில் நடக்கிறது.
இந்த குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை சம்பந்தபட்ட தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






