என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவருமான துரை கோவிந்தராசன் தலைமை வகித்தார்.
    • எம்.எல்.ஏ தே.மதியழகன் மாணவிகள் 56 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள எம்.நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான துரை கோவிந்தராசன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் பாலசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    விழாவில் மத்தூர் தி.மு.க வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குணவசந்தரசு, மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட பிரதிநிதி சாந்தமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ வுமான தே.மதியழகன் அரசுப் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பொம்மேப் பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, சிவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி சரவணன், மத்தூர் ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், நடுப்பட்டி கிளை செயலாளர் மதிபாலன், கிளை பிரதிநிதி வினாயகம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினகள், மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பள்ளியின் ஆசிரியர் விஜிபெர்னான்டர்ஸ் விழாவை ஒருங்கிணைத்தார். விழாவின் நிறைவாக பள்ளியின் ஆசிரியர் சின்னராஜன் நன்றி கூறினார்.

    • கோவில்களில் காலை நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பூஜைகளும், வழிபாடும் நடை பெறுகின்றன. இந்த ஆண்டு ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று 4-வது மற்றும் கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, எலுமிச்சைப் பழத்தோரணங்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமய புரத்து மாரியம்மன் கோவிலில் வஸ்திர அலங்கா ரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாகாத்தம்மன் அலங்காரத்திலும், அக்ரஹாரம் அம்பாபவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீ யோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ஏரிகரை பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,   

    திருப்பத்தூர் மாவட்டம் விளக்கல்நத்தம் குறிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சதீஸ்குமார் (வயது35). கூலித்தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் (36) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஓசூர் சென்றனர். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசியநெடுஞ்சாலை தொன்னையன் கொட்டாய் என்ற பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த வடிவேலை அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் மனோஜ்சிங் (30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மனோஜ் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குருபரம்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (50). இவர் பஞ்சாயத்து குடிநீர் தொட்டி திறந்து விடும் டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் தனது மொபட்டில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரிகரை பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கந்தி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்சியினர் தலைப்பாகை மற்றும் மாலை, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    • முரளிதரன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இதையொட்டி ஓசூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன் தலைமையில் கட்சியினர் மைசூர் தலைப்பாகை மற்றும் மாலை, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, முரளிதரன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரவீன், இர்ஷாத், சுரேஷ், மற்றும் மாவட்ட துணைத்தலைவர் அர்ஷாத், கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
    • திருப்பதிசாமி தலைமையில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஓசூரை சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கட்டா பிரிவில் 23 தங்கம், 11 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களையும், குமித்தோ பிரிவில் 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றும், மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்று சாதனை புரிந்தனர்.

    இதனை தொடர்ந்து, சாதனை படைத்த மாணவர்களுக்கு ஓசூர் டென்னிஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் செயலாளர் திருப்பதிசாமி தலைமையில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பொருளாளர் பசவலிங்கராஜ், கராத்தே மாஸ்டர் ரவி, பாப்பண்ணா மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கத் தலைவர் எம்.நடராஜன் மற்றும் நிர்வா–கக்குழு உறுப்பினர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • நிர்வாகக்குழு உறுப்பி–னர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய டெலிபோன் எக்சேன்ஞ் சாலையிலுள்ள கே.கே.361 கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்தது.

    இதையடுத்து, பதவிக்காலம் முடிந்த சங்கத் தலைவர் எம்.நடராஜன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் விழாவில் சங்க செயலாளர் முனிராஜ், பணியாளர் ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இருவரும் ஊத்தங்கரையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • காயமடைந்த மைந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மணியாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த குடியப்பன். இவரது மகன் மைந்தன் (வயது18). அதே பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் ஆதி (18).

    நண்பர்களான மைந்தனும், ஆதியும் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

    இந்த நிலையில் இருவரும் நேற்று ஊத்தங்கரையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். மீண்டும் இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்கள் மத்தூர் தேசிய நெடுஞ்சாலை அந்தேரிபள்ளி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மைந்தன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    இதில் தலையில் காயமடைந்த மைந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து மைந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக காரில் வந்த முனிராஜ், மொபட் மீது காரை வேகமாக மோதினார். இதில், சின்னபையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • முனிராஜ் அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், சின்னபையன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன் கொட்டாயை சேர்ந்தவர் சின்னபையன் (வயது45). பால் வியாபாரி. இவரது நண்பர் திப்பசந்திரத்தை சேர்ந்த முனிராஜ் (37). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

    இந்த நிலையில், முனிராஜ் அடிக்கடி சின்னபையன் வீட்டுக்கு சென்று வந்ததால், சின்னபையனின் மனைவி முத்துமாரி (32) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், சின்னபையன், முனிராஜிடம் பணமும், அவரது மனைவியிடம் நகைகளும் பெற்று அதனை திருப்பித்தர மறுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால், முனிராஜ் ஆத்திரமடைந்து, சின்னபையனை பழிவாங்க முடிவு செய்தார். கடந்த 14-3-2018 அன்று இரவு சின்னபையன், ஒசஹள்ளி பகுதியில் மொபட்டில் சென்றார்.

    அப்போது, அந்த வழியாக காரில் வந்த முனிராஜ், மொபட் மீது காரை வேகமாக மோதினார். இதில், சின்னபையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அவரை, முனிராஜ் அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், சின்னபையன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

    இது குறித்து தேன்கனி க்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோசலின் துரை, முனிராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • நெல் அரவை ஆலைகளில் பயன்பாட்டில் இருக்கும் மின் அளவீட்டையும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிக கழகத்தால் வழங்கப்படும் நெல் அரவையின் அளவீட்டையும் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட்டது.
    • கிருஷ்ணகிரி வழியாக அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று கண்காணிக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டார். கோவை மண்டலத்திற்குட்பட்ட, 8 மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லை பகுதிகளில் தீவிர சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையிலான குழு கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லை பகுதிகளான வரமலைக்குண்டா, குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடிகள் மற்றும் கர்நாடக எல்லை பகுதிகளான வேப்பனப்பள்ளி, நேரலகிரி, பேரிகை ஆகிய சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த போலீசாரிடம், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, மகராஜகடை, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அரவை ஆலைகளில் முறைகேடு நடைபெறுகிறதா? என, கண்காணிக்கப்பட்டது. நெல் அரவை ஆலைகளில் பயன்பாட்டில் இருக்கும் மின் அளவீட்டையும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிக கழகத்தால் வழங்கப்படும் நெல் அரவையின் அளவீட்டையும் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட்டது.

    மாநில எல்லைகளை ஒட்டியுள்ள சோதனைச்சாவடி மற்றும் அப்பகுதி கிராமங்களிலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் சிக்குபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கிருஷ்ணகிரி வழியாக அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சேலம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ரவிவர்மன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர், மணிகண்டன், போலீசார் மற்றும் பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.
    • மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கடையை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது42). இவர் போச்சம் பள்ளி பேருந்து நிலைய வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் முத்துவேல் இன்றுகாலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் ஷட்டர் கடப்பாரையால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கடையை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த விடுதி ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட மலைகிராம மாணவிகள் தங்கி கல்வி பயில நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
    • மாணவிகள் நன்கு கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    ஓசூர்,

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஓசூரில் ரூ.3 கோடியே 69 லட்சத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.

    அதை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

    இதையொட்டி ஓசூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றி மாணவி களுக்கு இனிப்புகளை வழங்கி, உணவு பரிமாறி னார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள் மற்றும் 11 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 46 விடுதிகள் இயங்கி வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் தாலுகாவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி 100 மாணவிகள் எண்ணிக்கையுடன் 02.03.2014 அன்று தொடங் கப்பட்டு செயல்பட்டு வரும் விடுதிக்கு தற்போது ரூ.3 கோடியே 69 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு முதல் அமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேற்படி விடுதியில் 100 மாணவிகள் தங்கும் அளவிற்கு 3 தளங்களில் 30 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுதிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, குளிரூட்டும் பெட்டி, கிச்சன் சிம்னி, நவீன மாவரைக்கும் எந்திரம், மிக்சி, அனைத்து வகை சமையல் எந்திரங்கள், சமையல் எரிவாயு உபகர ணங்கள், உணவருந்தும் மேசை, கம்யூட்டர் மேசை போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த விடுதி ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட மலைகிராம மாணவிகள் தங்கி கல்வி பயில நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. எனவே, மாணவிகள் நன்கு கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சாமிநாதன், உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், உதவி பொறியாளர்கள் ஜெசிந்தா பவளமல்லி, சேகரன், தாசில்தார் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலக்கிய மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல் உள்ளிட்ட பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • விழாவின் நிறைவாக தமிழாசிரியை சத்யா நன்றி கூறினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு பள்ளி யின் தலைமையாசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். உதவி தலைமை யாசிரியர் சின்னதுரை முன்னிலை வகித்து பஞ்ச பூதங்கள் பற்றிய தெளிவான விளக்கத்தையும், சைவ சமய குறவர்கள் பற்றியும், சைவ சித்தாந்தத்தை பற்றி யும் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் அறிவியல் துறை மற்றும் ஆங்கில துறை சார்பாக ஆசிரியர்கள் சின்னராஜ், ரவி ஆகியோர் கலந்து கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் கல்தோன்றி மண் தோன்றா காலத்தை வாலோடு தோன்றிய முன் தோன்றி மூத்த குடி என தமிழ் மன்ற சிறப்புரையாற்றினார்கள்.

    இலக்கிய மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல் உள்ளிட்ட பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை தமிழாசிரியர்கள் சகாதேவன், சத்யா, செல்வி ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக தமிழாசிரியை சத்யா நன்றி கூறினார். 

    ×