என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.நடுப்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
- விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவருமான துரை கோவிந்தராசன் தலைமை வகித்தார்.
- எம்.எல்.ஏ தே.மதியழகன் மாணவிகள் 56 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள எம்.நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான துரை கோவிந்தராசன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் பாலசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் மத்தூர் தி.மு.க வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குணவசந்தரசு, மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட பிரதிநிதி சாந்தமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ வுமான தே.மதியழகன் அரசுப் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பொம்மேப் பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, சிவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி சரவணன், மத்தூர் ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், நடுப்பட்டி கிளை செயலாளர் மதிபாலன், கிளை பிரதிநிதி வினாயகம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினகள், மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் ஆசிரியர் விஜிபெர்னான்டர்ஸ் விழாவை ஒருங்கிணைத்தார். விழாவின் நிறைவாக பள்ளியின் ஆசிரியர் சின்னராஜன் நன்றி கூறினார்.






