கூட்டுறவு வீட்டுவசதி சங்க அலுவலகத்தில் பணி நிறைவடைந்தவர்களுக்கு பாராட்டு

சங்கத் தலைவர் எம்.நடராஜன் மற்றும் நிர்வா–கக்குழு உறுப்பினர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா சங்க அலுவலகத்தில் நடந்தது.நிர்வாகக்குழு உறுப்பி–னர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
கூட்டுறவு வீட்டுவசதி சங்க அலுவலகத்தில் பணி நிறைவடைந்தவர்களுக்கு பாராட்டு
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய டெலிபோன் எக்சேன்ஞ் சாலையிலுள்ள கே.கே.361 கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்தது.

இதையடுத்து, பதவிக்காலம் முடிந்த சங்கத் தலைவர் எம்.நடராஜன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் விழாவில் சங்க செயலாளர் முனிராஜ், பணியாளர் ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com