என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நினைத்த செயலை முடிக்கவேண்டும், நினைக்கும் செயல் நல்லதாக இருக்கவேண்டும்.
    • நாம் இங்கு மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் எல்லையில் இருக்கக்கூடிய ராணுவ வீரர்களே.

    ஓசூர்,  

    ஓசூரில் உள்ள எம்.ஜி.ஆர்.கல்லூரியில் 76 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    அதியமான் பொறியியற் கல்லூரி உள் விளையாட்ட ரங்கில் நடந்த விழாவிற்கு, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி தலைமை தாங்கினார்.

    விழா ஒருங்கிணைப் பாளரும் , தமிழாய்வுத்துறைத் தலைவருமான லக்ஷ்மி வரவேற்றார்.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை யைச் சேர்ந்த பட்டிமன்றப் பேச்சாளர், தொலைக்காட்சி புகழ் ஜெயந்தஸ்ரீ பால கிருஷ்ணன் கலந்து கொண்டு, எண்ணிய முடிதல் வேண்டும்" என்ற தலைப்பில் பேசினார்.

    மேலும், நினைத்த செயலை முடிக்கவேண்டும் எனவும், நினைக்கும் செயல் நல்லதாக இருக்கவேண்டும் எனவும், அச்செயலைச் செயல்படுத்துவதற்கு மன உறுதி வேண்டும் எனவும் மாணவர்களுக்கு எடுத்து கூறினார். மேலும், நாம் இங்கு மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் எல்லையில் இருக்கக்கூடிய ராணுவ வீரர்களே என்றும் அவர் குறிப்பி ட்டார்.

    விழாவை யொட்டி, இரட்டையர் அசோக் மற்றும் ஆனந்த் , இந்தியா வின் முதல் பப்புள் நிபுணர் ராஜேந்திரன், கரகாட்டத்தில் உலக சாதனை படைத்த கணேஷ் , ரோலோ போ லோ பன்னாட்டளவிலான பரிசைப் பெற்ற சம்பத் ஆகியோரின் சாகச நிகழ்ச்சிகள், மற்றும் கேரள நடனக்குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் மிமிக்ரி வல்லுனர் விஜய்யின் பிரமிப்பூட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

    விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர், அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில், ஆங்கிலத்துறை பேராசிரியர் தரணி நன்றி கூறினார்.

    • கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • முத்துலட்சுமி திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கோப்பகரையை அடுத்த கக்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது44). இவரது மகள் முத்துலட்சுமி (23). இவருக்கும், கக்கதாசம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 3½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி முத்துலட்சுமி திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியதால், வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து முத்துலட்சுமியை மீட்டனர். உடனே அவரை சிகிச்சை க்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து முத்துலட்சுமியின் தந்தை பூங்காவனம் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3½ வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 351 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
    • இந்த விழாவிற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2022-23ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து கிழக்கு மாவட்ட அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 351 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். கட்சி பிரமுகர் அன்பரசன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் பரிதாநவாப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கிருபாகரன், செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், அஸ்லம், சித்ரா சந்திரசேகர், கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பங்கேற்று, கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 351 மாணவர்களுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழகளை வழங்கியதுடன், மீண்டும் மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பைகளை வழங்கி, வாழ்த்தி பேசினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க. தகவல் தெழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் பத்மபிரியா ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாநில செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, நகர செயலாளர் நவாப் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராசன் நன்றி கூறினார்.

    • வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவுடன் இணைந்து ஆய்வு செய்ததில், இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.
    • நிலத்தை யாராவது அபகரிக்க முயன்றால், தாரப் பசுவை வெட்டி அதனுடைய பாவத்தை பெரும் அளவிற்கு தண்டனை கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதுகலை தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி வனஜா, தனது கிராமமான உப்பாரப்பட்டியில் 800 ஆண்டுகள் பழமையான சோழர்கால சிவன் ஆலயமும், கல்வெட்டையும் கண்டறிந்தார்.

    கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவுடன் இணைந்து ஆய்வு செய்ததில், இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது என்றும் அதில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தை பார்க்கும் போது, ஹொய்சாளர்கள் காலகட்டத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று கூறினர்.

    லிங்கத்தின் மேல் பகுதியில் தெளிவாக உள்ளது. ஆவுடையார் பகுதி சதுரமாக உள்ளது. எட்டுப் படை என அழைக்கப்படும் விஷ்ணு பாகம் போன்று உள்ளது என்றும், அதே கோவிலின் அருகில் உள்ள சூரியனின் சிற்பமும், கையில் தாமரை மலருடனும், ஒரு கையானது உடைந்த நிலையில் காணப்படுகிறது.

    இந்த சிவலிங்கம் உப்பாரப்பட்டி ஒட்டிச்செல்லும் பாம்பாற்றின் கரையை ஒட்டிய ஊரான, ராமசாமி நகரில் இருந்தது என்றும், அங்கிருந்து பின்னர் மாணவியின் தாத்தாவான கோவிந்தசாமி, உப்பாரப்பட்டியில் கொண்டு வந்து வைத்து வழிபடுவதாகவும், முற்காலத்தில் இந்த லிங்கம் ராமனால் பூஜிக்கப்பட்டதாகவும், அதனால் இந்த லிங்கத்திற்கு ராமலிங்கேஸ்வரர் என்று பெயர் வந்துள்ளது.

    தங்கள் முன்னோர்கள் கூறியதன் மூலம் அறிந்து கொண்ட தகவலை மாணவி கூறியுள்ளார்.

    மேலும் கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்து வெளிப்படுத்தி உள்ளார். கல்வெட்டானது வலது இடது இருபுறமாக கல்வெட்டு பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கங்கை தாண்டவம் என்பவன் நிலத்தை தானமாக கொடுத்தார். அந்த நிலத்தை யாராவது அபகரிக்க முயன்றால், தாரப் பசுவை வெட்டி அதனுடைய பாவத்தை பெரும் அளவிற்கு தண்டனை கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் ஏதேனும் கல்வெட்டு சான்றுகளோ இலக்கியச் சான்றுகளோ கிடைக்கிறதா என, கல்லூரியின் தமிழ்துறை தலைவர் முனைவர் சவிதா மற்றும் வரலாற்று ஆய்வுக் குழுவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கல்வியோடு இணைந்து மாணவிகள் இது போன்ற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் மாணவி வனஜாவை, அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீனி.திருமால்முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால் முருகன், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • வீட்டில் 30 கிலோ பட்டாசுகள் அனுமதி யின்றி இருந்ததது தெரியவந்தது.
    • பட்டாசு களை வைத்து இருந்ததாக நவுசாத்தை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்தி ருபபதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அதில் நவுசாத் (வயது 36) என்பவரின் வீட்டில் 30 கிலோ பட்டாசுகள் அனுமதி யின்றி இருந்ததது தெரியவந்தது.

    இதையடுத்து பட்டாசு களை வைத்து இருந்ததாக நவுசாத்தை போலீசார் கைது செய்தனர்.

    • ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கடந்த பொதுத் தேர்வில் 59 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்றனர்.
    • காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பார்கள்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உரிகம் மலைக் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

    இக்கிராம மாணவர்கள் உரிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இக்கிராமப் பகுதியிலிருந்து இயக்கப்படும் ஒரே பேருந்தில் பயணிகளின் நெரிசலுக்கு இடையில் மாணவர்கள் பயணித்து பள்ளிக்கு வருகின்றனர்.

    ஆனால், பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை. மேலும், 16 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 8 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.

    இது ஒருபக்கம் இருக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால், விளையாட்டு மைதானத்தில் கரையான் புற்றுகள் வளர்ந்துள்ளன.

    பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால், பள்ளி வளாகம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை கட்டிடம் இடிந்து பல ஆண்டுகளாகியும் புதிய கழிப்பறை கட்டாததால், திறந்த வெளியை அவசரத்துக்கு மாணவர்கள் பயன்படுத்தும் நிலையுள்ளது.

    இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில்:- ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலையுள்ளது.

    வெளியூர்களுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைக்கும் அளவுக்கு எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே, உரிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், போதிய அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் வேண்டும் என கூறினர்.

    இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் மலைக் கிராமம் என்பதால் ஆசிரியர்கள் இங்கு பணிக்கு வர தயங்கு கின்றனர்.

    ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கடந்த பொதுத் தேர்வில் 59 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்றனர்.

    காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பார்கள் என கூறினர்.

    கிராம பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், இதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும்.

    அடிப்படை வசதி மற்றும் பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியுள்ள மலைக் கிராம மாண வர்களுக்கு கல்வி புறக்கணிக்கப்படுவது, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றத்தைத் தராது என்பதை உணர்ந்து இப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இப்பகுதி கல்வி யாளர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    • மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார்.

    ஓசூர்:

    ஓசூர் தாலுகா ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். முனிராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இது குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வருகிறார்கள்.

    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கோப்பகரையை அடுத்த கக்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது44). இவரது மகள் முத்துலட்சுமி (23). இவருக்கும், கக்கதாசம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 3½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8-ந் தேதி முத்துலட்சுமி திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியதால், வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து முத்துலட்சுமியை மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து முத்துலட்சுமியின் தந்தை பூங்காவனம் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3½ வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.
    • போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புறநகர் கிளை வளாகத்தில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் தருமபுரி மண்டலத்தில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா, ரத்ததான முகாம் நடந்தது.

    இதனை கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    சில மாநிலங்களில் போக்குவரத்து துறையில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை.

    இதற்கு காரணம் முதலமைச்சர் செயல்படுத்தி உள்ள மகளிருக்கு கட்டண மில்லா பயணத் திட்டம் தான்.

    இந்த திட்டத்திற்காக அரசு வழங்கும் நிதியின் மூலம் போக்குவரத்து துறை வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.

    பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள் கடந்த 2 காலத்தில் ரூ.1500 கோடியையும், 3 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள தொகையை இன்னும் 4 மாதங்களுக்குள் அவர்களுக்கு வழங்கப்படும். பொதுமக்களின் பஸ் பயன்பாடு அதிகமான நிலையில் ரூ.500 கோடி மதிப்பில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும், 1500 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

    அதன்படி ரூ.14 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதுப்பிக் கப்பட்ட 100 மஞ்சள் நிற பஸ்கள் பயன் பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு , தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 345 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • 11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மகாராஜகடை அரசு உயர் நிலைப்பள்ளி சார்பில், சரக அளவிலான செஸ் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 345 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன், மகராஜகடை அரசு உயர்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ரோஸ்லின், பெற்றோர் கழக தலைவர் வஜீர், உடற்கல்வி ஆசிரியர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் 3 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 50 பேர் வீதம், 150 பேர் கலந்து கொண்டனர்.
    • தொல்லியல் கட்டுரைப் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த கட்டுரைப் போட்டிகள், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரையில் நேற்று நடந்தது. 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 50 பேர் வீதம், 150 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, பண்டைத் தமிழ்ச் சமூகம் என்ற தலைப்பில் கட்டுரை எழுத இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டது.

    150 பேரில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுத்து, முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தொல்லியல் கட்டுரைப் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். கட்டுரைப் போட்டியை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தர்மபுரி காப்பாட்சியர் பரந்தாமன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு முதல் மூன்று பேரை தேர்வு செய்கின்றனர். தேர்வாகும் மூன்று பேர் மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 3 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வரலாற்று ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    வருகிற 15-ந் தேதி 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர விழாவை கொண்டாடுவது குறித்து முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர்கள் சரண்யா, பாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×