என் மலர்
கிருஷ்ணகிரி
- கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.
- 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.
கிருஷ்ணகிரி:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 25).
இவர் தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏறிய அவர், செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது மொபைலும் உடைந்துள்ளது.
கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் சற்குணம், ராஜி, இளவரசன், மஞ்சூர் அஹமத், அன்பு, நவீன் குமார் ஆகிய தீயணைப்பு வீரர்கள் செங்குத்தான பகுதியில், 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.
பின்னர் அவரை தீயணைப்பு படை வீரர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இன்று அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6.30 மணி வரை அமித்குமாரை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, சப்-கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.
- துறை அதிகாரிகள் மற்றும் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில், ஜி.ஆர்டி சர்க்கிள் அருகே, இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஸ்ரீ காளிகாம்பாள் காமட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ரூ.76 லட்சம் மதிப்பில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, ஓசூரில் கட்டுமானப் பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் , மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, சப்-கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர்கள் சின்னசாமி, சாமிதுரை, துறை அதிகாரிகள் மற்றும் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சப்-கலெக்டர் சரண்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
- ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் சரண்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
மேலும் இதில், சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் தனி தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு, ஆணையர் சினேகா முன்னிலை வகித்தார் இதில், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரசு, பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், வெங்கடேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவினர் மகனான ஹரீஷ் (23) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்.
அப்போது அந்த பெண்ணுக்கும் , வெங்கடேஷூக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் அந்த பெண்ணை கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு வெங்கடேஷ் வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் ஹரீஷ் அவரை சரமாரியாக கைகளாலும், கட்டையாலும் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிறிது நேரத்தில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.
- இந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டமானது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்றடைந்து.
- வருகிற 20-ந்தேதி மதுரையில் நடை பெறவுள்ள மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜோதி ஒப்படைக்க படவுள்ளது.
ஓசூர்,
மதுரையில், வருகிற 20ந் தேதி அதி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வெற்றி ஜோதி தொடர் ஓட்டம் நடைபெறுகிறது.
இதனை, ஓசூரில் நேற்று கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி, துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல். ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் இதில், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர். வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன் மற்றும் வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டமானது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்றடைந்து.
பின்னர் வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜோதி ஒப்படைக்க படவுள்ளது.
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சா விற்ற ஓசூர், பாகலூர், சூளகிரி, அஞ்செட்டி பகுதிகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக், பான்மசாலா ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர், பர்கூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், பேரிகை, பாகலூர், சூளகிரி, தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,200 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்தததாக ஓசூர், பாகலூர், சூளகிரி, அஞ்செட்டி பகுதிகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் எங்கும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணத்தனர்.
அந்த வகையில் லாட்டரி விற்பனை செய்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள குருகப்பட்டி அப்துல் மஜித் (36), ராயக்கோட்டை ராஜீவ்காந்தி நகர் மாரியப்பன் (48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- குத்துவிளக்கினை தாளாளார் பாரதி ராசேந்திரன், இணை இயக்குனர் வருண்பாபு ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.
- பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் திருவண்ணாலை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மத்தூர் கலைமகள் கலாலயா கல்வி நிறுவனங்களின் 24-ம் ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவினை பள்ளியின் நிறுவனர் ராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார். அனைவரையும் பள்ளியின் இயக்குனர் அமுதினி ராசேந்திரன் வரவேற்றார். குத்துவிளக்கினை தாளாளார் பாரதி ராசேந்திரன், இணை இயக்குனர் வருண்பாபு ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பொது பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மறைமலையாடிகளாரின் கொள்ளு பேத்தியும், புலியூர் கேசிகன் இலக்கிய பேரவையின் நிறுவனரும் உரையாசிரியருமான கலைச்செல்வி புலியூர் கேசிகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியரிடம் சிறப்புரையாற்றினார்கள்.
பின்னர் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். பின்னர் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியாக ஆடல், பாடல் நடனம், நாடகம், நாட்டியம் யோகா நடைபெற்றது.
விழாவில் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் சூரியமுர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- கலைக்குழுவினரின் தமிழர் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
- வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளியில், இந்திய தேசத்தின் சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணி கல்வி குழுமம் மற்றும் ஓசூர் செயின்ட்பீட்டர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய கோவை கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் தமிழர் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியை செயின்ட் பீட்டர்ஸ், அதியமான் கல்லூரி மற்றும் வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் நிறுவனர் டாக்டர். தம்பிதுரை எம்பி., தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
இந்த நிகழ்ச்சியினை பள்ளியின் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
முடிவில் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் மற்றும் குழுவினருக்கு தம்பிதுரை எம்பி., நினைவு பரிசுகளை வழங்கி, நிகழ்ச்சியினை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காணிக்காயக்குவதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் பர்கூர் ஜெயபால், வேப்பனஹள்ளி முனியப்பன், வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநரான விஜயலட்சுமி, அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் தனபால் மற்றும் சாதிக், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம், வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாங்கண்ணி பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- அந்தேரிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ஒன்று திடீரென்று அவர்கள் மோதியது.
- சென்னம் மாளின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய போலீசாரை கண்டித்து அந்தேரிப் பட்டி கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சுண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சென்னம்மாள் (வயது50). இவரது மகன் பத்மநாபன் (25). இந்த நிலையில் தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து மத்தூருக்கு வந்தனர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை-பெங்களூரு சாலை அந்தேரிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ஒன்று திடீரென்று அவர்கள் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சென்னம்மாளையும், பத்மநாபனையும் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சென்னம்மாளின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய போலீசாரை கண்டித்து அந்தேரிப்பட்டி கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை மற்றும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சை க்காக உத்தனபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- அதிகாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நாகமங்கலம் கூத்தனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது23). டிரைவரான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பசப்பா மகன் கார்த்திக் (24), பதின்குமார் (24), உள்ளுக்குறுகை பகுதியைச் சேர்ந்த சுமேஷ் (24), ரமேஷ் (24), சத்தியமூர்த்தி (24) ஆகிய 5 பேருடன் காரில் நேற்று இரவு ராயக்கோட்டைக்கு வந்தார்.
அப்போது ராமமூர்த்தி ஓட்டி வந்த கார் ராயக்கோட்டை அருகே தருமபுரி-ஓசூர் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையில் பாளேபுரம் மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளனாது.
இதில் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் கார்த்திக், சுமேஷ், ரமேஷ், சத்தியமூர்த்தி, பதின்குமார் மற்றும் எதிரே காரில் வந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பா (40) ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தில் பலியான ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சை க்காக உத்தனபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதில் கார்த்தி ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சுமேஷ், ரமேஷ், பதின்குமார், சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு காரில் வந்த டிரைவர் முனியப்பாவை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து உத்தனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
- அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
ஓசூர்,
ஓசூர் தாலுகா ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். முனிராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இது குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வருகிறார்கள்.
- கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 47). இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அந்த கிணற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்தது கிடந்தது.
இதுகுறித்து அவர் கல்லகுறுக்கி கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தங்கராஜ் பார்வையிட்டு இதுகுறித்து மகாராஜா கடை போலீசாருக்கு புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த வாலிபரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் உடலில் கயிறால் கட்டப்பட்டு மறுமுனையில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை யாராவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? அல்லது வாலிபரே தனது உடலில் கயிற்றை கட்டி மறுமுனையில் கல்லை கட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு சம்பவம்
கந்திகுப்பம் அருகே சின்ன ஓரப்பம் கிராமத்தில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. தற்போது 30 அடியில் தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் இதுகுறித்து ஓரப்பம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






