என் மலர்
உள்ளூர் செய்திகள்

அலுவலகத்தில் சப்-கலெக்டர் சரண்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
ஓசூரில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்
- சப்-கலெக்டர் சரண்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
- ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் சரண்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
மேலும் இதில், சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் தனி தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு, ஆணையர் சினேகா முன்னிலை வகித்தார் இதில், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரசு, பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.






