என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
மத்தூர் கலைமகள் கலாலயா பள்ளி ஆண்டு விழா
- குத்துவிளக்கினை தாளாளார் பாரதி ராசேந்திரன், இணை இயக்குனர் வருண்பாபு ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.
- பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் திருவண்ணாலை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மத்தூர் கலைமகள் கலாலயா கல்வி நிறுவனங்களின் 24-ம் ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவினை பள்ளியின் நிறுவனர் ராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார். அனைவரையும் பள்ளியின் இயக்குனர் அமுதினி ராசேந்திரன் வரவேற்றார். குத்துவிளக்கினை தாளாளார் பாரதி ராசேந்திரன், இணை இயக்குனர் வருண்பாபு ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பொது பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மறைமலையாடிகளாரின் கொள்ளு பேத்தியும், புலியூர் கேசிகன் இலக்கிய பேரவையின் நிறுவனரும் உரையாசிரியருமான கலைச்செல்வி புலியூர் கேசிகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியரிடம் சிறப்புரையாற்றினார்கள்.
பின்னர் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். பின்னர் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியாக ஆடல், பாடல் நடனம், நாடகம், நாட்டியம் யோகா நடைபெற்றது.
விழாவில் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் சூரியமுர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






