search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    மத்தூர் ஊராட்சி ஒன்றியம் கண்ணன்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை மற்றும் உணவை ஆய்வு செய்து போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா மாணவ ர்களிடம் கேட்டறிந்தார்.
    • குடிநீர் பணிகள், சாலை பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணன் டஹள்ளி, கெரிக்கே ப்பள்ளி, சாலமரத்துப்பட்டி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளா ட்சித்துறை சார்பில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும், கண்ணன்டஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி கண்ணன் டஹள்ளி ஊராட்சி, அத்திகா னூர் கிராமத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் (2023-2024) நிதியாண்டு கீழ் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு சம உயர வரப்பு அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    அங்கு பணியாளர்களின் வருகை பதிவேடு, வேலை வழங்கப்பட்ட நாட்கள், ஊதியம் வழங்கப்பட்ட விவரங்களை பார்வை யிட்டார். மேலும் பதிவேடுகளை சரியாக பராமரிக்க பணிதள பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அத்திகானுர் கிராமத்தில் 15 வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் செங்குத்து உறிஞ்சிக் குழியுடன் புதியதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு கால்வாயின் நீளம் அகலம் மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கூச்சூர் தோழனூர் கிராமத்தில் உள்ள 60 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு பைப்லைன் அமைக்கும் பணிகள், மின் இணைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கூச்சூர் கிராமம் ராஜீவ் நகர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை கூடுதல் தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை மற்றும் உணவை ஆய்வு செய்து போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா மாணவ ர்களிடம் கேட்டறிந்தார்.

    இதே போல கெரிகேப்ப ள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களில் வர்ணம் பூசும் பணிகள், சமையல் அறை கட்டுமான பணிகள், சாலை பணிகள், என மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த குடிநீர், சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக கண்ணன்டஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொ றியாளர் பசுபதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமார், துரைசாமி, உதவி பொறியாளர்கள் சாஸ்தா, ஜமுனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×