என் மலர்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி வெளிமாநிலங்களில் வரக்கூடிய பொதுமக்கள் அரசு அனுமதிபெற்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்த மாநிலங்களில் இருந்து வருவதற்கும், இ-பாஸ் கட்டாயம் என, நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள கர்நாடக மாநிலத்தில் நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வரக்கூடிய வாகனங்களை தீவிரமாக சோதனை செய்திட கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஒரு பகுதியாக சோதனைச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் வெளிமாநில வாகனங்களை கண்காணிக்கவும், சோதனை செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு சோதனைச்சாவடிகளுக்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழக - கர்நாடகா எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில், தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
பிற மாநில கார், வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்ததுக்குள் அனுமதிக்கப்பட்டன.

இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று முதல், பிற மாநில பதிவு எண்ணுடன் வரும் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை, இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. சரக்கு மற்றும் அத்தியவசிய தேவைகளுக்கான வாகனங்களை, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் அனுமதித்தனர். கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தினமும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளை தேடி நோயாளிகள் படை யெடுக்கும் அவலம் தொடர்கிறது.
ஓசூரில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஒசூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 5 லட்சத்தைக் கடந்து விட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் தொழிற்சாலை வாகனங்களில் தினமும் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.
ஒசூரில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள பிற மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து விட்டது.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் சென்றனர். பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால், திரும்பி வந்த தொழிலாளர்கள் தற்போது 2-வது தலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ஒசூரில் உள்ள தனியார் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 323 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில், ஒசூரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 250 பேருக்கு மேல் உள்ளனர். ஒசூரில் தினந்தோறும் சுமார் 200 முதல் 250 பேருக்கு கொ ரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இவர்கள் அனைவரும் ஒசூரில் உள்ள அரசு மருத்துவமனை தனியார் மருத்துவ மனைகளை நாடி வருகின்றனர். அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் படுக்கைகள் நிரம்பிவிட்டன. எனவே 100 முதல் 150 பேர் வரை தினந்தோறும் ஒசூர் அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அவர்களை ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோதித்து, குறைந்த தொற்று உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு திருப்பி அனுப்புகின்றனர்.
மேலும், தொற்று கடுமையான உள்ளவர்களையும், ஆக்சிஜன் தேவைப்படுபவர்களையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மருந்துவ மனைகளுகுகுச் செல்லும்படி அறிவுரை கூறி வருகின்றனர்.
ஒசூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலோர் சிறிய வீடுகளில் வசித்து வருவதால், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,
எனவே, கொரோனா தொற்றாளர்களுக்கு சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதை உடனே செயல்படுத்த வேண்டும். இதுதவிர, ஒசூரில் இயங்கி வரும் ஒசூர் இ.எஸ்ஐ. மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சி.தம்மாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்னையா(55). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சையும் பெற்றும் குணமாகவில்லை,
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று சி.தம்மாண்டரப்பள்ளியில் உள்ள ராமைய்யா ஏரியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிபதியின் பாதுகாவலர் அன்பரசன் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சத்தலப்பள்ளியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவர் பர்கூர் மெயின் ரோட்டில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சென்டர் நடத்தி வருகிறார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பர்கூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். விமானம், ரெயில், கார்களில் செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பயண அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதை பயன்படுத்தி கொண்ட தினேஷ் போலியாக கொரோனா பரிசோதனை செய்து அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நெகட்டிவ் என சான்றிதழ் அளித்து, அவர்கள் விமானங்கள் மூலமாகவும், ரெயில் மூலமாகவும், வட மாநிலங்களுக்கு பயணம் செல்ல ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தயாரித்த போலி சான்றிதழில் அரசு டாக்டர் கையெழுத்து, அரசு ஆஸ்பத்திரி சீல் ஆகியவற்றையும் வைத்து கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து பர்கூர் போலீசுக்கு வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலி சான்றிதழ் மற்றும் ஆஸ்பத்திரி சீல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(29). இவர் பர்கூரில், திருப்பத்தூர் சாலையில் லட்சுமிகணபதி ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஆபிஸ் நடத்தி வந்தார். இவர் விமானம் மற்றும் சொகுசு பேருந்து, ரயில் போன்றவற்றிற்கு டிக்கெட் புக்கிங் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் போலியாக கொரோனா நெகட்டிவ் என பயணிகளுக்கு சான்றிதழ் தயாரித்து, அரசு மருத்துவர் கையெழுத்து, அரசு மருத்துவமனை சீல் போன்றவற்றை வைத்து கொடுத்து வந்துள்ளார்.
குறிப்பாக பர்கூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ரயிலில் பயணம் செய்ய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்பதால் இவ்வாறு போலி சான்றிதழ் தயாரித்து டிக்கெட் புக் செய்து கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர். கலையரசி பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து, தினேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தார்.






