என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குருபரப்பள்ளி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    குருபரப்பள்ளி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி நீலா (வயது 27). இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதற்காக கடந்த 6 மாதங்களாக அவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நீலா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×