என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கெலமங்கலம் அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சி.தம்மாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்னையா(55). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சையும் பெற்றும் குணமாகவில்லை,

    இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று சி.தம்மாண்டரப்பள்ளியில் உள்ள ராமைய்யா ஏரியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×