search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வடமாநில தொழிலாளர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ் வழங்கிய வாலிபர் கைது

    விமானம், ரெயில், கார்களில் செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பயண அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சத்தலப்பள்ளியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவர் பர்கூர் மெயின் ரோட்டில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சென்டர் நடத்தி வருகிறார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பர்கூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். விமானம், ரெயில், கார்களில் செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பயண அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இதை பயன்படுத்தி கொண்ட தினேஷ் போலியாக கொரோனா பரிசோதனை செய்து அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நெகட்டிவ் என சான்றிதழ் அளித்து, அவர்கள் விமானங்கள் மூலமாகவும், ரெயில் மூலமாகவும், வட மாநிலங்களுக்கு பயணம் செல்ல ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தயாரித்த போலி சான்றிதழில் அரசு டாக்டர் கையெழுத்து, அரசு ஆஸ்பத்திரி சீல் ஆகியவற்றையும் வைத்து கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்து பர்கூர் போலீசுக்கு வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலி சான்றிதழ் மற்றும் ஆஸ்பத்திரி சீல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×