என் மலர்
செய்திகள்

விபத்து பலி
சாமல்பட்டி அருகே வாலிபர் விபத்தில் பலி
சாமல்பட்டி அருகே வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த அலமேலுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியில் உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். சாமல்பட்டி அடுத்த கெரிகேப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள புங்க மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






