என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    காவேரிப்பட்டணம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வனராஜ். இவருடைய மனைவி மணி (வயது 48). இவர்களுக்கு முனீஸ்வரி, மகேசுவரி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று இருவரும் தாய் வீட்டுக்கு வந்தனர். அப்போது மணிக்கும், அவருடைய மகள்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த மணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த மாது (வயது 52), கல்குட்டப்பட்டி குப்பன் (56), எம்.சவுளூர் சின்ன குழந்தை (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.
    காவேரிப்பட்டணம் அருகே கிரானைட் கற்களை வெட்டியபோது, மின்சாரம் தாக்கியதில் வடமாநில தொழிலாளி பலியானார்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்ற இடத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெய கிருஷ்ணாஜனா (வயது 35) என்பவர் கிரானைட் கற்களை வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் கிரானைட் கற்களை எந்திரம் மூலம் வெட்டி துண்டாக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் ஜெய கிருஷ்ணாஜனா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர முன்னாள் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்று பேசினார். ராகுல்காந்தி பேரவை செயல் தலைவர் மகபூப் பாஷா, மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் ஷபிக் அஹமத், பொதுச்செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யா கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 308 பேர் பலியாகி உள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருகிறது. நேற்று 70 பேர் மட்டுமே புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 40 ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 106 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 342 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் தற்போது 764 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 308 பேர் பலியாகி உள்ளனர்.
    குடும்ப தகராறில் விசாரணைக்குச் சென்ற சப்- இன்ஸ்பெக்டக்டரின் மண்டையை ராணுவ வீரர் உடைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (36). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில், சக்திவேல் நேற்று காலை பஞ்சாப்பில் இருந்து காவேரிப்பட்டணத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும், சொந்தமாக தொழில் தொடங்க இருப்பதால், தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வா எனக்கூறி விஜயலட்சுமியை சரமாரியாக தாக்கி சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதையடுத்து, காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் கணவர் சக்திவேல் கொலைமிரட்டல் விடுப்பதாக விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்துவதற்காக, சக்திவேலை வீட்டில் இருந்து அழைத்து வருமாறு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவை அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஒரு ஆட்டோவில் குண்டலப்பட்டியில் உள்ள சக்திவேல் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த சக்திவேலிடம், புகாரின் பேரில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், தன்னுடன் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறினார். அதற்கு சக்திவேல் எதற்காக வர வேண்டும்? என கூறி வாக்குவாதம் செய்தார்.

    அப்போது, அங்கு வந்த சக்திவேலின் தம்பி யேசு (37) என்பவருடன் சேர்ந்து சக்திவேல், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவை கல்லால் தாக்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டி கீழே சரிந்து விழுந்தார்.

    அப்போது, போலீஸ்காரருடன் வந்த ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் கல்வீச்சு தாக்குதலை தடுத்த போது, ஆட்டோ டிரைவருக்கும் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, சக்திவேலும், யேசுவும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைதொடர்ந்து, சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவும், ஆட்டோ டிரைவர் ராஜாவும் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    இந்த சம்பவம் குறித்துகாவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய யேசுவை கைது செய்தார். மேலும் தலைமறைவான சக்திவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    குடும்ப தகராறில் விசாரணைக்குச் சென்ற சப்- இன்ஸ்பெக்டக்டரின் மண்டையை ராணுவ வீரர் உடைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது திடீரென ஒரு நல்ல பாம்பு ஏறியது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் அம்மன் சிலை மீது பாம்பு படமெடுத்து ஆடியது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வேலம்பட்டி அடுத்த வேங்கானூர் பகுதியில் முன்பு பொன்னியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால் சுற்றுவட்டார பகுதி பொது மக்கள், பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது திடீரென ஒரு நல்ல பாம்பு ஏறியது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் அம்மன் சிலை மீது பாம்பு படமெடுத்து ஆடியது.

    இதை பார்த்து அந்த வழியாக சென்ற சிலர் பரவசம் அடைந்தனர். உடனே இதுபற்றி கிராம மக்களுக்கு தெரியப்படுத்தினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடியது. அம்மன் சிலை மீது பாம்பு இருக்கும் காட்சியை கண்டு பக்தி பரவசத்துடன், அம்மனை வழிபட்டனர்.

    சிறிதுநேரம் கழித்து நாகப்பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,343ஆக உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 40 ஆயிரத்து 343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதில் நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 128 பேர் உள்பட, 39 ஆயிரத்து 236 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 799 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 308 ஆக உள்ளது.

    பர்கூர் அருகே விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பர்கூர் தாலுகா ஒப்பதவாடி வரதப்பன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 65). சம்பவத்தன்று இவர் மொபட்டில் ஒப்பதவாடி காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் சாலையில் சரிந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 87 பேர் பாதிக்கப்பட்டனர். 165 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.


    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 87 பேர் பாதிக்கப்பட்டனர். 165 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 39 ஆயிரத்து 108 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 844 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 308 ஆக உள்ளது.
    உத்தனப்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபத்தை சேர்ந்தவர் நவேஷ்குமார் (வயது 33). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-உத்தனப்பள்ளி சாலையில் அளேசீபம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் நவேஷ்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே நவேஷ்குமார் இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர் அருகே கடையில் துளையிட்டு பேட்டரிகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 45). இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான பேட்டரிகள் விற்பனை கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருந்தது. மேலும் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான 20 பேட்டரிகள் திருட்டு போயிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது குறித்து சம்சுதீன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
    ×