என் மலர்
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் காந்திநகரை சேர்ந்தவர் ஷோபா. இவர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஷோபாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் ஆதர் ஷர்மா. இவரது மனைவி சந்திர பிரபா (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். சந்திர பிரபாவின் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில், மனமுடைந்த சந்திரபிரபா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
பேரிகை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
பேரிகை அருகே உள்ள பீமாண்டப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது 66). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். மோட்டார் இயங்காததால் அவர் அதை சோதனை செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கெலமங்கலம் அருகே டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள டி.கொத்தனுரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (35). பூனப்பள்ளியை சேர்ந்தவர்கள் நடராஜ் (29), மாரியப்பன் (28). இவர்கள் 3 பேரும் குடிபோதையில் அலசெட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு அவர்களுக்குள் திட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது அலசெட்டி டிரைவர் சந்திரப்பா (32) என்பவர் ஏன் பொதுவாக திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சந்திரப்பாவை தகாத வார்த்தையால் திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்திகேயன் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார், நடராஜ், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
காவேரிப்பட்டணம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி புதூர் பகுதியில் காவேரிப்பட்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிரக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக கோவிந்தராஜ் (வயது 36), ரஜினி (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
ஓசூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் மசூதி தெருவில் வசித்து வருபவர் பீம்சிங் (வயது 28) இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் அரவிந்த் (33). இவர்கள் இருவரும் பானி பூரி விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அரவிந்த் மனைவி ரூபி, சமையல் செய்வதற்காக, சிலிண்டரை ஆன் செய்தார்.
அப்போது கியாஸ் வீடு முழுவதும் பரவி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் பீம்சிங், அவரது சகோதரர் அரவிந்த், அரவிந்த் மனைவி ரூபி, அரவிந்தின் மகன் அபிஷேக் மற்றும் ரோலி, பீம்சிங்கின் தாய் சந்திராதேவி பீம்சிங்கின் மற்றொரு சகோதரர் ரித்திக் ஆகிய 7 பேர் உடல் கருகி படுகாயமடைந்தனர். மேலும் அருகில் வசிக்கும் ரிஸ்வான் என்பவரது மகன்கள் சபீர் மற்றும் சாதிக் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த பீம்சிங் குடும்பத்தினர் 7 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பீம்சிங், ரிஸ்வான், மாலிகான், ரத்தினம்மா, ஹர்ஷா உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரை உடைந்து தூக்கி வீசப்பட்டது. இந்த சீட்டானது, அருகில் உள்ள தெருக்கள் மற்றும் மற்ற வீடுகளின் மேல் விழுந்தது. வீடுகளில் இருந்த உணவு பொருட்கள் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் மசூதி தெருவில் வசித்து வருபவர் பீம்சிங் (வயது 28) இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் அரவிந்த் (33). இவர்கள் இருவரும் பானி பூரி விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அரவிந்த் மனைவி ரூபி, சமையல் செய்வதற்காக, சிலிண்டரை ஆன் செய்தார்.
அப்போது கியாஸ் வீடு முழுவதும் பரவி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் பீம்சிங், அவரது சகோதரர் அரவிந்த், அரவிந்த் மனைவி ரூபி, அரவிந்தின் மகன் அபிஷேக் மற்றும் ரோலி, பீம்சிங்கின் தாய் சந்திராதேவி பீம்சிங்கின் மற்றொரு சகோதரர் ரித்திக் ஆகிய 7 பேர் உடல் கருகி படுகாயமடைந்தனர். மேலும் அருகில் வசிக்கும் ரிஸ்வான் என்பவரது மகன்கள் சபீர் மற்றும் சாதிக் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த பீம்சிங் குடும்பத்தினர் 7 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பீம்சிங், ரிஸ்வான், மாலிகான், ரத்தினம்மா, ஹர்ஷா உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரை உடைந்து தூக்கி வீசப்பட்டது. இந்த சீட்டானது, அருகில் உள்ள தெருக்கள் மற்றும் மற்ற வீடுகளின் மேல் விழுந்தது. வீடுகளில் இருந்த உணவு பொருட்கள் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் சிறுத்தைப்புலி நடமாடியதாக சமூக வலைத்தளத்தில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் கூசுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன், சிறுத்தையை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வன ஊழியர்கள் கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர். மேலும் கேமராக்கள் மூலமும் கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி நடமாட்டம் தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் சிறுத்தை படத்துடன் செய்தி ஒன்று பரவியது. அதில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆயுதப்படைக்கு செல்லும் வழியில், தேர்தல் அலுவலக கட்டிடம் அருகில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடி உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அந்த வழியாக செல்ல வேண்டாம். குறிப்பாக இரவு நேரங்களில் அங்கு செல்ல வேண்டாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அந்த சிறுத்தைப்புலி ஆடுகள், நாய்களை வேட்டையாடி உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் என குறிப்பிட்டு, சிறுத்தைப்புலி நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதாகவும் படம் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் சிறுத்தைப்புலி உள்ளதாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்த சமூக வலைத்தள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனியிடம் கேட்ட போது கூறியதாவது:-
நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலகம் பின்புறம் சிறுத்தைப்புலி நடமாடியதாக எங்களுக்கு தகவல்வந்தது. நாங்கள் அந்த பகுதியில் சென்று சிறுத்தைப்புலியின் கால்தடங்கள் உள்ளதா? என்று பார்த்தோம். இதில் நாய்கள் அந்த பகுதியில் சென்றதற்கான கால் தடங்களே இருந்தன. யாரும் சிறுத்தைப்புலியை நேரில் பார்த்ததாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடந்த 10 நாட்களாக சிறுத்தையை யாரும் பார்த்ததாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆனாலும் கிருஷ்ணகிரி கூசுமலை, மேலுமலை, சிக்காரிமேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் பக்கமுள்ள திருமலை குப்பத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). இவர் ஓசூர் சிப்காட் அருகே பேகேப்பள்ளி ராஜாஜி நகரில் தங்கி, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சண்முகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் நகர பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சுபாஷ் சந்திர போஸ் தெரு எத்திராஜ் (வயது 63) என்பவரை கைது செய்தனர். அதே போல போச்சம்பள்ளி போலீசார் பஸ் நிலையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற குமரவேல் (47) என்பவரை கைது செய்தனர். நாகரசம்பட்டி போலீசார் அகரம் கிராமத்தில் ரோந்து சென்றபோது லாட்டரி சீட்டுகள் விற்ற லோகநாதன் (65) என்பவரை கைது செய்தனர்.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 25 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம்நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 148 மதிப்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 25 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கினார். மேலும், திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், திட்ட அலுவலர் ராஜேஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, சந்தூர், மத்தூர், ஜெகதேவி, ஊத்தங்கரை, பர்கூர், வரட்டனப்பள்ளி, வேப்பனபள்ளி, காவேரிப்பட்டணம், சாப்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மா விளைச்சல் சீசனின் போது, கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களால், மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பல மாங்கூழ் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் மாங்காய் விற்பனை முற்றிலும் குறைந்ததால், விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
தற்போது மறுகாப்பு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேப்பனப்பள்ளி அருகே உள்ள அத்திகுண்டா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறுகாப்பு மாங்காயை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, விவசாயி சபியுல்லா கூறுகையில், எனது மூன்று ஏக்கர் மாந்தோப்பில் 30 டன் மறு காப்பு மாங்காய்கள் விளைந்துள்ளன. டன் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் விலை கிடைக்கிறது. மாமரத்தை பராமரிப்பது, மருந்து அடிப்பது, டிராக்டர் கொண்டு தண்ணீர் விடுவது உள்ளிட்ட செலவுகளுக்கு இடையே ஓரளவிற்கு இம்முறை லாபம் கிடைத்துள்ளது. வருடந்தோறும் மா சீசனில் விளையும் மாங்காய்களை விட, இடைப்பட்ட காலத்தில் விளையும் இந்த மறுகாப்பு மாங்காய்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.
ராயக்கோட்டை அருகே பெண்ணை கட்டிபிடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பொம்மதாத்தனூர் அருகே அனுசோனை கிராமத்தை சேர்ந்த மாதப்பா மகன் முனேஷ் (வயது 30). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் செல்போனிடம், நேரிலும் சந்தித்து பேசிய வந்ததாக தெரிகிறது. நேறறு முன்தினம் அந்த பெண்ணை முனேஷ் கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது முனேசை, அந்த பெண்ணின் கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனேசை கைது செய்தனர். இதற்கிடையே முனேஷ் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






