என் மலர்
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம் அருகே திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவர்முக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் மஞ்சு (வயது 22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தில் மஞ்சுவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மஞ்சு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவர்முக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் மஞ்சு (வயது 22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தில் மஞ்சுவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மஞ்சு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
மத்திகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
ஓசூர் சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயராம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஷோபா (வயது35). இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 6 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஓசூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஸ்கூட்டரில் நின்றிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பேரிகை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும், ஷோபாவிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையயடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பேரண்டப்பள்ளி அருகே காரில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூரில் இருந்து நேற்று மாலை கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நின்றிருந்த போலீசாரை பார்த்ததும் டிரைவர், காரை மீண்டும் ஓசூர் நோக்கி ஓட்டி சென்றார். இதனால் மீண்டும் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூளகிரி அருகே போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்று விட்டது. இதனால் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் காரை நிறுத்த முயன்ற போது, அங்கு கார் டயர் பஞ்சரானது. போலீசார் டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டுவை சேர்ந்த அருணாச்சலம் (வயது24) என்பதும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு, 16 மூட்டைகளில் ரூ.94 ஆயிரத்து 400 மதிப்புள்ள, 112 கிலோ குட்காவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அட்கோ போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்து. விசாரித்து வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள உண்டிக்கான் கொட்டாயை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 71). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அர்ஜூனன், விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வசாரணை நடத்தி வருகிறார்கள்.
போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள பூதனூர் பகுதியை சேர்ந்தவர்முருகன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி நல்லம்மாள் (56). இவர்களது பேரன் இன்பரசன் (7). இவர்கள் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் மங்கலபட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர். போச்சம்பள்ளி நான்கு வழி சாலை அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். 13 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். 13 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் 43 ஆயிரத்து 177 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 42 ஆயிரத்து 472 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 358 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உள்ளது.
ஓசூரில் பணம் வைத்து சூதாடிய 16 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குட்டி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சூர்யா நகரை சேர்ந்த குட்டி (வயது 40), அத்திப்பள்ளி பாபுஜான் (41), பெஸ்மனஅள்ளி தேவராஜ் (40), சித்தநாயக்கனஅள்ளி சுனில் (22), நாராயணசாமி (40), மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முனியப்பா என்கிற சிட்டி (47), பாரதி நகர் கிரண் (26), பல்லூர் முனிராஜ் (44), ஆதிகொண்டப்பள்ளி சந்தோஷ் (30), அத்திப்பள்ளி பாஸ்கர் (28), எப்பகோடி சிட்டிபாபு (46), அத்திப்பள்ளி முருகேஷ் (41), நெல்லூர் பில்லப்பா (40), பெங்களூரு ராஜூ (43), தின்னூர் நாகராஜ் (32), ஒன்னல்வாடி சேகர் (38) ஆகிய 16 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 600 மற்றும் 16 செல்போன்கள், 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
கிருஷ்ணகிரி
த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை அரசு விரைவுப்படுத்த வேண்டும். வருகிற தீபாவளி பண்டிகைக்கு ஒருவாரத்திற்கு முன்னும், பின்னும் பொது இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அந்த காலக் கட்டங்களில் மாணவர்கள் வெளியில் சென்றால் பாதிப்பு ஏற்படும். எனவே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந் தேதி அன்று பள்ளிகளை திறக்காமல் நவம்பர் 8-ந் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் .
தி.மு.க. அரசின் தேர்தல் கால அறிவிப்புகளான பெண்களுக்கு 1000 ரூபாய், நெல்லுக்கு ஆதார விலை, மாதந்தோறும் மின் கணக்கீடு, நெசவாளர்களுக்கு தனியார் வங்கி ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதி ஏற்றவாறு ரத்து செய்யவில்லை என்பது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. மதுக்கடைகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில், வழிபாட்டுதலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை அரசு விரைவுப்படுத்த வேண்டும். வருகிற தீபாவளி பண்டிகைக்கு ஒருவாரத்திற்கு முன்னும், பின்னும் பொது இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அந்த காலக் கட்டங்களில் மாணவர்கள் வெளியில் சென்றால் பாதிப்பு ஏற்படும். எனவே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந் தேதி அன்று பள்ளிகளை திறக்காமல் நவம்பர் 8-ந் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் .
தி.மு.க. அரசின் தேர்தல் கால அறிவிப்புகளான பெண்களுக்கு 1000 ரூபாய், நெல்லுக்கு ஆதார விலை, மாதந்தோறும் மின் கணக்கீடு, நெசவாளர்களுக்கு தனியார் வங்கி ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதி ஏற்றவாறு ரத்து செய்யவில்லை என்பது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. மதுக்கடைகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில், வழிபாட்டுதலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
பாகலூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேஷ் (வயது 46). இவர், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதில் மனம் உடைந்த வெங்கடேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஓசூர் அருகே தொழிற்சாலையில் நடந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்திகிரி:
ஓசூர் - தளி சாலையில் கலுகொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து அதை உருக்கி இரும்பு கம்பிகளை தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்த பணியில் பீகார் மாநிலம் சுனில் படேல் (வயது 30), சலாவுதீன் (24), ஜாகீர் ஹஜாம் (24), மத்திய பிரதேச மாநிலம் தேவேந்தர் சிங் (30) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் ஜிதேந்தர் குமார் லோதி (20) என்பவர், கிரேனை இயக்கி கொண்டிருந்தார். பழைய இரும்பு பொருட்களை உருக்கும் டேங்கில் பழைய இரும்பு பொருட்களை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இரும்புகளை உருக்கும் எந்திரத்தில் இருந்து இரும்பு துகள்கள் ஜிதேந்தர் குமார் லோதி மற்றும் அருகில் பணியில் இருந்த சுனில் படேல், சலாவுதீன், ஜாகீர் ஹஜாம், தேவேந்தர் சிங் ஆகியோர் மீது பட்டது. 5 பேரும் படுகாயம் அடைந்து அலறி துடித்தனர்.அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜிதேந்தர் குமார் லோதி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 15 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10 லட்சத்து 40 ஆயிரத்து 820 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2 லட்சத்து 89 ஆயிரத்து 13 பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரத்து 269 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு 84 நாட்கள் கழித்து, 1 லட்சத்து 33 ஆயிரத்து 427 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தி கொண்டவர்களுக்கு, கொரோனா நோய் அறிகுறி ஏற்பட்டாலும் அவசர சிகிச்சை தேவைபடாமலும், ஆக்ஸிஜன் தேவை ஏற்படாமலும் இருக்கும். எனவே, பொதுமக்கள் அனைவரும் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் 87 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 800-க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் உடன் இருந்தார்.






