என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூர் அருகே முயல் வேட்டையாடிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அட்கோ போலீசார், நேற்று கெலவரப்பள்ளி அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக, ஸ்கூட்டரில் நாட்டுத்துப்பாக்கியையும், ஒரு முயலையும் வைத்து கொண்டு வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கெலமங்கலம் அருகே பச்சப்பனட்டியை சேர்ந்த விவசாயி முனியப்பா (வயது45) என்பதும், முயல் வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ஸ்கூட்டர், நாட்டுத்துப்பாக்கி, முயல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஓசூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). தொழிலாளி. இவருக்கும், இவரது மகனுக்கும் இடையே தகராறு இருந்தது. இந்த நிலையில் நாகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஓசூர் பகுதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி வரையில் கொரோனா பரவவில்லை. இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. சூளகிரியில் முதலில் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பிறகு கொரோனா வேகமாக பரவியது. முதல் அலையில் தினமும் 50 முதல் 60 பேருக்கு பாதிப்பும், தினமும் 2 முதல் 3 பேர் இறப்பு என இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-வது அலை கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டது. தினமும் 800-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றும், 30-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு என சென்றது.

    இந்தநிலையில் ஓசூர் பகுதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஓசூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது நாளுக்கு நாள் உயர வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. எனவே கொரோனா 3-வது அலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் இருந்து தொடங்குகிறதோ? என்ற பயம் மக்களை தொற்றி உள்ளது. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 5 சதவீத மக்கள் மட்டுமே முக கவசம் (மாஸ்க்) அணிந்து செல்கிறார்கள். அனைத்து பகுதிகளிலும் கூட்டம், கூட்டமாக காணப்படுகிறார்கள். எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    கெலமங்கலம் அருகே தகராறில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே உள்ள ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 37) விவசாயி. இவரது அண்ணன் சொன்னப்பா அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த இடத்தில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நஞ்சப்பா, நாராயணப்பா, சின்னப்பா, சுப்பிரமணி ஆகியோர் சம்பவத்தன்று தகராறு செய்தனர். அத்துடன் முனிராஜ், அவரது அண்ணன் சொன்னப்பாவை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து முனிராஜ் கொடுத்த புகாரின்பேரில் நஞ்சப்பா உள்பட 4 பேர் மீது கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நஞ்சப்பாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    ஸ்ரீவர்மா ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் ஓசூரில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
    ஓசூர்:

    சென்னையை தலைமை இடமாக கொண்டு ஸ்ரீவர்மா ஆயுர்வேதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இந்த மருத்துவமனை சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை பேஸ்-6 ஆவலப்பள்ளி அட்கோ பஸ்தி ரோட்டில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதற்கு ஆயுர்வேத டாக்டர் கே.கவுதமன் தலைமை தாங்கி பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முகாமில் சித்தா, ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் சிகிச்சை பெற்று நலம் பெறலாம். முதுகு தண்டுவட வலிகள், மூட்டு வலிகள், சோரியாசிஸ், தோல் நோய்கள், வெண்புள்ளிகள், ஆட்டிசம் போன்றவை குணப்படுத்தப்படும்.

    சைனஸ் பிரச்சினைகள், ஆஸ்துமா, சிறுநீரகக்கல், கருமுட்டைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், குடல் இறக்கம், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

    இதுபோன்ற முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே பி.சிங்கிரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மப்பா (வயது45). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில், கஞ்சா செடி வளர்த்து வருவதாக பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை செய்து அவர் வீட்டில் வளர்த்து வந்த 6 கஞ்சா செடிகளை அழித்தனர். இதுதொடர்பாக போலீசார், அவரை கைது செய்தனர்.
    பர்கூரில் பெண்ணிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் அருகே உள்ள பாகிமானூர் பகுதியை சேர்ந்தவர் மேகலா (வயது 38). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இவர் தனது தோழியான டாக்டர் கோகிலா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து வைத்துள்ளார். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, கோகிலா தனது கணவரின் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து மேகலா பர்கூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து கொடுப்பதாக கூறி ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்து கொண்டு சென்றனர். இதுகுறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபிதா வங்கி ஏ.டி.எம் -ல் உள்ள கண்காணிப்பு கேமராவையும், பர்கூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மத்திகிரி அடுத்த கொத்தகொண்டபள்ளி பகுதியை சேர்ந்த மணி (27), மஞ்சுநாத் (33) ஆகியோர் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஏ.டி.எம். கார்டு மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் மாபெரும் 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் மாபெரும் 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 732 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கெலமங்கலம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர்கள் முனிராஜ் (வயது 37), சொன்னப்பா. விவசாயிகள். இவர்களில் சொன்னப்பா அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த இடத்தில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நஞ்சப்பா, நாராயணப்பா, சின்னப்பா, சுப்பிரமணி ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் சொன்னப்பா, முனிராஜ் ஆகியோரை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின்பேரில் நஞ்சப்பா உள்பட 4 பேர் மீதும் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் போலீசார் ஜெகதேவியில் சோதனை நடத்தினர். அங்கு விஜயா (வயது55) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக தெரிகிறது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ஓசூர் பஸ் நிலையத்தில் மாணவியிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பெங்களூரு ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர் லீனா (வயது 20). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று அவர் பெங்களூரு செல்ல ஓசூர் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது பெண் ஒருவர், லீனாவின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். 

    பின்னர்அந்த பெண், ஓசூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பழனியை சேர்ந்த ரவி என்பவரது மனைவி மகேஸ்வரி (45) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி போலீசார் தொட்டபெல்லா ஆறு பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோரிபாளையம் மாதேஷ் (வயது40), ராஜா (45), பிரபு (38), தேவன்தொட்டி மாதேவ் (39) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×