என் மலர்tooltip icon

    கரூர்

    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்த எம்.எல்.ஏ இளங்கோ
    • பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் வழங்கும் நியாயவிலைக்கடையில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வையாபுரிநகர் கிளை வங்கி சேமிப்பு கணக்கு சிறப்பு முகாமில் குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் விற்பனையாளர் கௌசல்யா என்பவர் அதிக அளவிலான புதிய சேமிப்பு கணக்கு துவங்கியதைத் தொடர்ந்து பதிவாளர் அவர்களின் அறிவுரைப்படி ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வீதம் 207 விண்ணப்பத்திற்கு ரூ.1035 ஊக்கத்தொகை மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா வழங்கினார்.மேலும், இந்த முகாமில் மகளிருக்கு உடனுக்குடன் சேமிப்பு கணக்கு துவக்கிட விண்ணப்பம் அளித்து உடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் பெறப்பட்டது.இந்நிகழ்வில் துணைப்பதிவாளர் அபிராமி , வங்கி துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • அதிக அளவில் கணக்கு தொடங்கிய பெண்ணுக்கு பாராட்டு நடைபெற்றது
    • பாராட்டி பணப்பரிசு வழங்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் வழங்கும் நியாயவிலைக்கடையில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வையாபுரிநகர் கிளை வங்கி சேமிப்பு கணக்கு சிறப்பு முகாமில் குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் விற்பனையாளர் கௌசல்யா என்பவர் அதிக அளவிலான புதிய சேமிப்பு கணக்கு துவங்கியதைத் தொடர்ந்து பதிவாளர் அவர்களின் அறிவுரைப்படி ஒரு விண்ணப்பத்திற்கு ₹5 வீதம் 207 விண்ணப்பத்திற்கு ₹1035 ஊக்கத்தொகை மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா வழங்கினார். மேலும், இந்த முகாமில் மகளிருக்கு உடனுக்குடன் சேமிப்பு கணக்கு துவக்கிட விண்ணப்பம் அளித்து உடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் பெறப்பட்டது.இந்நிகழ்வில் துணைப்பதிவாளர் அபிராமி , வங்கி துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • கரூர் மாற்றுத்திறனாளியை கலெக்டர் பிரபுசங்கர் பாராட்டினார்
    • ரயில்வே ஆர்ஆர்பி குரூப்-டி தேர்வில்தேர்ச்சி பெற்றதற்கு பாராட்டு

    கரூர், 

    கரூர் மாவட்ட மைய நூலகத்தில், 'கேட்பொலி நூலகப் பிரிவில்' (ஆடியோ விசுவல் லைப்ரரி), பார்வையற்ற மாற்றுத்திறனாளி வடிவேல் என்பவர், ரயில்வே ஆர்ஆர்பி குரூப்-டி தேர்வில்தேர்ச்சி பெற்று சென்னை பெரம்பூரில் பணி நியமனம் பெற்றுள்ளார். இதையடுத்து. மாற்றுத்திறனானி வடிவேலை, கரூர் கலெக்டர் பிரபுசங்கர். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டு உள்ளது
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    குளித்தலை அடுத்த, ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கலையரசி(வயது 44). அங்கன்வாடி பணியாளரான இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் மதியம், திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஆறு பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கலையரசி கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டூவீலர் இருந்த நகை, செல்போன் மாயமானது
    • அபேஸ் செய்த 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 35). தனியார் வங்கியின் இன்சூரன்ஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது பைக் கவரில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை, செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து தினேஷ்குமார், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் 2 மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்துள்ளது.

    • இருசக்கர வாகனம், டிவியை திருட முயன்றவர் மாட்டிக்கொண்டார்
    • போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்

    கரூர், 

    க.பரமத்தி அருகே உள்ள சின்னதாராபுரம் அருகே ராஜபுரம் பிரிவு பகுதியில் வசிப்பவர் நாச்சிமுத்து (வயது 72). சம்பவத்தன்று இவரது வீட்டில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும், வீட்டில் இருந்த டிவியையும் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை கண்ட நாச்சிமுத்து சத்தம்போட்டுள்ளார். இதையடுத்து, அப்பகுதியினர் உதவியுடன் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரிடம் விசாரித்தனர். இதில், அவர் சின்னதாராபுரம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் ஏசுதாஸ் (வயது 32), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.

    • கரூரில் தடுக்கி விழுந்த டிரைவர் பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர், 

    கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்துள்ள தெற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விமலக்கண்ணன் (வயது 42). தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வந்த இவர், வீட்டின் அருகில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றுள்ளார. செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனுநீதி நாள் நிறைவு முகாம் நடைபெற்றது.
    • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கரூர்

    க. பரமத்தி ஒன்றியம், எலவனூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனுநீதி நாள் நிறைவு முகாம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கினார். சின்னதாராபுரம் வருவாய் ஆய்வாளர் மகுடீஸ்வரன் வரவேற்று பேசினார். அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில், எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு 291 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரத்து 619 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், எலவனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    கரூர்

    கரூர் நடையனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 55). இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் ஏராளமான தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

    • வாகன விபத்தில் முதியவர் பலியானார்.
    • மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி முதியவர்

    கரூர்:

    கரூர் நடையனூர் அருகே உள்ள பூலான்காலனி பகுதியை சேர்ந்தவர் ராமநாயக்கர் (வயது 84). இவர் தனது வீட்டில் இருந்து நொய்யல் செல்வதற்காக வேலாயுதம்பாளையம் -நொய்யல் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முனிநாதபுரம் வெள்ளக்கல் மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு கரூர் குப்பிச்சிபாளையம் எல்லமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலை பள்ளியின் பஸ்சை அதன் டிரைவர் நல்லசாமி (63) இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ், ராமநாயக்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமநாயக்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ராமநாயக்கர் மகன் ரவி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார், டிரைவர் நல்லசாமி மீது வழக்குப்பதிந்து, அந்த பஸ்சையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது

    கரூர்:

    கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). விவசாயி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கண்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பிரேக் பிடிக்காததால் மின்கம்பங்கள் மீது மோதி ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானது
    • உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கரூர்,

    கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் கரூரில் இருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்து செல்லும் ஷேர் ஆட்டோவினை ஓட்டி வருகிறார். நேற்று வழக்கம்போல் தாந்தோணிமலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, கரூர் நோக்கி வந்தார்.அப்போது உழவர்சந்தை பகுதியில் வந்தபோது ஷேர் ஆட்டோவில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதாமல் இருக்க, சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்களுக்கு இடையே ஆட்டோவை மோதி சாமர்த்தியமாக ஆட்டோவை பிரபு நிறுத்தினார்.இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து ஷேர் ஆட்டோ டிரைவர் பிரபு மற்றும் பயணிகளை உடனடியாக ஆட்டோவில் இருந்து வெளியேற்றினர். இதனால் ஆட்டோவில் பயணித்த பயணிகள் மற்றும் டிரைவர் பிரபு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் ஆட்டோவின் முன்பக்கம் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்கம்பங்களை சரி செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×