என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட முயன்ற நபர் கைது
- இருசக்கர வாகனம், டிவியை திருட முயன்றவர் மாட்டிக்கொண்டார்
- போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்
கரூர்,
க.பரமத்தி அருகே உள்ள சின்னதாராபுரம் அருகே ராஜபுரம் பிரிவு பகுதியில் வசிப்பவர் நாச்சிமுத்து (வயது 72). சம்பவத்தன்று இவரது வீட்டில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும், வீட்டில் இருந்த டிவியையும் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை கண்ட நாச்சிமுத்து சத்தம்போட்டுள்ளார். இதையடுத்து, அப்பகுதியினர் உதவியுடன் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரிடம் விசாரித்தனர். இதில், அவர் சின்னதாராபுரம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் ஏசுதாஸ் (வயது 32), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
Next Story






