என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூர் மாவட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
    • 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடுதுறை , நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், மோது காடு, பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றி லை போன்ற வெற்றிலை களை பயிர் செய்துள்ளனர். பறிக்கப்படும் வெற்றிலை களை பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை அசோசி யேசன் வெற்றிலை மண்டிக ளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்வர்.

    இங்கு வாங்கப்படும் வெற்றிலைகள் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா , கர்நா டகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.1500-க்கும் வாங்கிச் சென்றனர்.

    நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 1,200-க்கும் வாங்கிச் சென்றனர்.

    • புன்னம் சத்திரம் பகுதியில்டீக்கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது
    • வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உள்ள பழைய டாஸ்மாக் கடை அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்து பலர் மது அருந்தி வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல்களின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பலர் அமர்ந்து கொண்டு மது பாட்டில்களை வைத்து மது அருந்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்ததாக நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியில் சேர்ந்த தினேத்( 39) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    • சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
    • எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகை மலை அருகே காவல்காரன் பட்டியில் வடசேரி கிராமத்திற்குட்பட்ட ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது, விழாவில் அப்பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர் சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சாமி கும்பிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று மாலை இந்த பிரச்சினையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது, இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்தும், மற்றும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து தோகைமலை போலீசார் இரு தரப்பினரிட மும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. 

    • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • கால்நடை மருத்துவர்கள் தீபக், அரவிந், நவீன்குமார் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்

    கரூர்

    கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் 6-ம் நாள் குளித்தலை சரகத்தில் உள்ள செல்லாண்டிபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் பால்வளத்துறை துணைப்பதிவாளர் த.சோ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், நன்றாக பராமரிக்க வேண்டும் என உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

    சங்க உறுப்பினர்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்றனர். அதிக பால் உற்பத்தி செய்த உறுப்பினர், நன்றாக கால்நடை பராமரிப்பு ஆகிய உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கள அலுவலர்கள் குமார், சதீஷ்குமார், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, ஆவின் உதவி பொது மேலாளர் மருத்துவர் துரையரசன் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் குறித்தும், நோய்கள் வராமல் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் சங்க உறுப்பினர்களுக்கு தனது சிறப்புரையில் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    கால்நடை மருத்துவர்கள் தீபக், அரவிந், நவீன்குமார் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கப்பட்டது. சங்க செயலாட்சியர் திரு.ந.முரளி வரவேற்புரையாற்றினார், செயலாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார் , ஆவின் பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    இதேபோல் திருக்கல்யாணம் வைபவத்தை முன்னிட்டு நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    • கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    • சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கரூர்,

    கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் காமராஜபுரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவகர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர் ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

    பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லி வலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து பள்ளப்பட்டி, மண்மாரி, வேலம்பட்டி, ரெங்கராஜ்நகர், லிங்கப்பநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வல்லப்பம்பட்டி சந்தப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிப்பட்டி, மொக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன் வலசு அரவக்குறிச்சி, கொத்தம்பாளையம், கரடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை சுடுகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வேலாயுதம்பா ளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமை யிலான போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்துறை சுடுகா டு பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் சேவல் சட்டையில் பணம் கட்டி சூதாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது .

    அதன் அடிப்படை யில் அவர்களை சுற்றி வளைத்து விசாரணை நடத்தி னர். அப்போது சேவல் சண்டை சூதாட்ட த்தில் ஈடுபட்ட வர்கள் புன்னம் சத்திரம் அருகே பாண்டி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தெய்வே ந்திரன் (வயது 40), கரூர் திருவள்ளு வர் நகரைச் சேர்ந்த சபரிநாதன் (26) ,கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கவிய ரசன் (26),

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் அரசார் காட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (26),கரூர் வேலுச்சாமி புரம் பகுதி யைச் சேர்ந்த கண்ணன் ( 32 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது . 5 பேரையும் கைது செய்து சேவல் சண்டையில் ஈடுபட்ட சேவ ல்களை பறி முதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    புகளூர் அருகேஒப்பந்ததாரரை கடத்தி பணம் பறித்த தூத்துக்குடி வாலிபர்கள்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 48 ). இவர் புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலை மற்றும் தமிழ்நாடு முழுவதும் சிவில் ஒப்பந்த காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.

    செல்வக்குமாரிடம் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவ னத்தில் நிவின் ஸ்டார் செல்வகுமாரின் சிவில் காண்ட்ராக்டில் ஒப்பந்தம் செய்து பணியை முடித்து விட்டு அதற்கு உண்டான தொகையை பெற்றுக் கொண்டனர். பின்னர் நிவின் ஸ்டார் மேலும் பணம் வேண்டும் என்று செல்வகுமாரிடம் கூறி யுள்ளனர்.

    செல்வகுமார் பாலத்து றையில் உள்ள தனது பெயிண்ட் கடையை இரவு மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கூலக்கவுண்டனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வக்குமாரை தடுத்து நிறுத்தி கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி அவரை காரில் கடத்திச் சென்று தகாத வார்த்தை களால் பேசி தாக்கியுள்ளனர்.

    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து செல்வகு மாரிடம் இருந்து அவர் வைத்திருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகுமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் தூத்துக்கு டியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நா ளை முன்னிட்டு தேசிய ஒரு மைப்பாடு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நமது நாட்டில் பெருகிவரும் சாதி, மத, மொ ழி பாகுபாடுகளை எதி ர்க்கும் வகையில் வன்மு றையில் ஈடுபடாமல் மக்களின் உணவுப்பூர்வ ஒற்றுமைக்கு பாடுபடவே ண்டி தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகி ருஷ்ணன், உதவி பொது மேலாளர்( ஐ.டி) பாலமுருகன்,

    முதுநிலை மேலாளர்( மனித வளம்) சிவக்குமார் ,முதுநிலை மேலாளர்( மெக்கானிக்கல் )அசோகன், மேலாளர் (மனித வளம் )வெங்க டேசன் ஆகியோர் தலைமை யில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம்

    வேலாயுதம்பா ளையம், 

    கரூர் மாவட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.

    புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மல்லீஸ்வரன் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் மூலம் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.

    முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகா விற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதா ரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசிஎண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர்.

    அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்த னர்.முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

    • குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடு துறை, பேச்சிப்பா றை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.600- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தற்போது நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    • கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக புகழூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியை புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் நேரில் ஆய்வு செய்து பணியினை துரிதப்படுத்தி முடிக்க கூறினார். ஆய்வின் போது நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×