என் மலர்tooltip icon

    கரூர்

    • மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
    • அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). விவசாயி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வருவதற்காக ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அதே சாலையில் அவருக்கு பின்னால் வந்த ஈரோடு மாவட்டம் நொச்சிபா ளையம்

    சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்( 25 ) என்பவர் மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இதில் நிலை தடுமாறி பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது . அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்களும், அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வேலாயு தம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் விபத்து ஏற்படுத்திய தினேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்ற முதியவர் மீது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

    இது குறித்து வேட்ட மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகே சன் வேலாயு தம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோட்டார் சைக்கிளை அதிகமாக ஓட்டி சென்று முதியவர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கோம்புப்பாளையம் பகுதி யை சேர்ந்த குருசாமி (வயது 70) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டி ற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.900- க்கும், சம்பங்கி கிலோ ரூ.80- க்கும்,

    அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் விற்பனையானது. தற்போது நடைபெற்ற குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்க்குதுக்கும், சம்பங்கி கிலோ ரூ.160- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.290- க்கும், கனகாம்பரம் ரூ.1600-க்கும் விற்பனையானது.

    தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புகளூரில் மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், நவ.23-

    கரூர் மாவட்டம் புகளூர் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கொடியரசு (வயது70). இவர் கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தெய்வானை (66).இருவரும் புகளூர் அன்னை நகரிலிருந்து தளவாபாளையம் பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தனர். அன்னை தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, செம்படாபாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.இதில் தம்பதிக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாலைபுதூர் வேளாண் கூடத்தில் நிலக்கடலை ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது
    • ஏலத்தில் 25.50 குவிண்டால் நிலக்கடலை விற்பனையானது

    கரூர், நவ. 23-

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.50 குவிண்டால் எடை கொண்ட 77-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.30-க்கும், சராசரி விலையாக ரூ.86.70-க்கும் என ரூ 2லட்சத்து 16ஆயிரத்து 541-க்கு ஏலம் போனது.

    • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் புகளூர் காகித ஆலையில் நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்,

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்து வரும் 25-ந்தேதி சனிக்கிழமை மற்றும் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களி லும் நடைபெறும் சிறப்பு முகாம் குறித்து விளக்குவ தற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்க நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது.இதில் கரூர் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், புகழூர் நகராட்சி அதிகாரி, புகளூர் தாசில்தார் முருகன், செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் சீனிவாசன், பொது மேலாளர் கலைச்செல்வன், துணைப் பொது மேலாளர் இராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • இயற்பியல் துறை சார்பில் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சா லையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் துறையில், பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக்குழு உறுப்பினரும், அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கி விழா வினை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் கள். மேலும் இயற்பியல் துறையின் சாதனைகளை ஃப்ளக்ஸ்-ல் புகைப்படமாக அச்சிட்டு பெற்றோர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட து. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினை இயற்பி யல் துறைத் தலைவர் ராஜ லிங்கம் மற்றும் பேராசிரி யர்கள் கமளீஸ்வரி, சங்கீதா, திவ்யா, பவித்ரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வேலாயுதம் பாளையம் அருகே வேன் கவிழ்ந்து 23 ேபர் காயம் அடைந்தனர்
    • கோவிலுக்கு ெசன்ற போது சம்பவம் நிகழ்ந்தது

    வேலாயுதம்பாளையம், 

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் 22 பேர் ஆம்னி வேனில் தேனி மாவட்டத்தில் உள்ள வருநாடு கருப்ப்ணசாமி கோவிலுக்கு சென்றனர்.பின்னர் அங்கு சாமி கும்பிடு விட்டு அதே வேனில் நேற்று ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.அந்த வேனை தருமபுரி சாமி ரெட்டிபட்டி எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 28). என்பவர் ஓட்டி வந்தார்.கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்துறை- தவுட்டுப்பாளையம் மேம்பாலத்தில் அந்த வேன் வந்து கொண்டிருந்தது.அந்த நேரத்தில் கனமழையின் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலத்திற்கு முன்பாக மழை நீர் தேங்கி இருந்தது. அப்போது முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென்று இஞ்சின் ஆப் ஆகி நின்று விட்டது.இதனால் வேன், காரின் மீது மோதால் இருப்பதற்காக சசிகுமார் வேனை நிறுத்தினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் இடது புறமாக தலைகுப்புற கவிழ்தது.இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சமபவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் வேனில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 22 பேரை மீட்டனர்.இதில் பென்னாகரம் அருகே கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமி (55), பென்னாகரம் தோளூர் பகுதியை சேர்ந்த ருத்ரம்மாள் (50), கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த சரத்குமார் (27), அவரது மனைவி ஷோபனா (26), அதே பகுதியை சேர்ந்த மாரம்மாள் (45) ஆகியோரை உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    • கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.


    வேலாயுதம்பாளையம்


    கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமைதொடங்கி வைத்தார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், உதவி இயக்குநர் டாக்டர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் டாக்டர் உஷா, டாக்டர் தமிழரசன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், சிகிச்சைப் பணிகள், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை போன்ற பணிகள் மேற்க்கொண்டனர். விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. .சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. முகாமில் திருக்காடுதுறை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.




    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
    • நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே செல்வநகர் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. எனவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக் கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 19 லட்சத்து34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    வேலாயுதம்பாளையம்

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக் கான ஏலம் நடைபெறுகிறது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 459 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.70 ஆயிரத்து 488-க்கு விற்பனையானது.

    அதேபோல் 224 குவிண்டால் எடை கொண்ட437-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.60-க்கும், சராசரி விலையாக ரூ.85.99-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.10-க்கும், சராசரி விலையாக ரூ.79.39-க்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.

    அதேபோல் 11.75 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.78-க்கும், சராசரி விலையாக ரூ.155.99-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 78ஆயிரத்து 135-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 19 லட்சத்து34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    • இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
    • உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர்மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பா ளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.

    இங்கு வாங்கப்படும் வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைப்பர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,170 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,220 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    • புகழூர் நகராட்சி பகுதியில் ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    • நகராட்சித் தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    புகழூர் நகராட்சி பகுதியில் நீட் விலக்கு நம் இலக்கு குறித்த ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  நகராட்சித் தலைவர் குணசேகரன், பதிவு செய்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன்,கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மற்றும் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள், நகர வார்டு தி.மு.க. பொறுப்பாளர்கள், மாவட்ட, பேரூர் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×