என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி படுகாயம்
- புகளூரில் மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்
- வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர், நவ.23-
கரூர் மாவட்டம் புகளூர் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கொடியரசு (வயது70). இவர் கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தெய்வானை (66).இருவரும் புகளூர் அன்னை நகரிலிருந்து தளவாபாளையம் பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தனர். அன்னை தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, செம்படாபாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.இதில் தம்பதிக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






