கரூர் மாவட்டத்தில் - நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கரூர் மாவட்டத்தில் - நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
Published on

கரூர்,

கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் காமராஜபுரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவகர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர் ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லி வலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து பள்ளப்பட்டி, மண்மாரி, வேலம்பட்டி, ரெங்கராஜ்நகர், லிங்கப்பநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வல்லப்பம்பட்டி சந்தப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிப்பட்டி, மொக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன் வலசு அரவக்குறிச்சி, கொத்தம்பாளையம், கரடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com