ஒப்பந்ததாரரை கடத்தி பணம் பறித்த தூத்துக்குடி வாலிபர்கள்

புகளூர் அருகேஒப்பந்ததாரரை கடத்தி பணம் பறித்த தூத்துக்குடி வாலிபர்கள்
ஒப்பந்ததாரரை கடத்தி பணம் பறித்த தூத்துக்குடி வாலிபர்கள்
Published on

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் புகளூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 48 ). இவர் புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலை மற்றும் தமிழ்நாடு முழுவதும் சிவில் ஒப்பந்த காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.

செல்வக்குமாரிடம் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவ னத்தில் நிவின் ஸ்டார் செல்வகுமாரின் சிவில் காண்ட்ராக்டில் ஒப்பந்தம் செய்து பணியை முடித்து விட்டு அதற்கு உண்டான தொகையை பெற்றுக் கொண்டனர். பின்னர் நிவின் ஸ்டார் மேலும் பணம் வேண்டும் என்று செல்வகுமாரிடம் கூறி யுள்ளனர்.

செல்வகுமார் பாலத்து றையில் உள்ள தனது பெயிண்ட் கடையை இரவு மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கூலக்கவுண்டனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வக்குமாரை தடுத்து நிறுத்தி கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி அவரை காரில் கடத்திச் சென்று தகாத வார்த்தை களால் பேசி தாக்கியுள்ளனர்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்து செல்வகு மாரிடம் இருந்து அவர் வைத்திருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகுமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் தூத்துக்கு டியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com