தேங்கி நிற்க்கும் மழைநீரை அகற்றும் பணி - நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தேங்கி நிற்க்கும் மழைநீரை அகற்றும் பணி - நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு
Published on

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக புகழூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் நேரில் ஆய்வு செய்து பணியினை துரிதப்படுத்தி முடிக்க கூறினார். ஆய்வின் போது நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com