என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர்.
    • நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்க ளுக்கான நேர்காணல் சுவாமியார்மடத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் லிஜிஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஜெபர்சன், பைஜூ, ஆல்பின் பினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர். இவர்களிடம் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஈரோடு பிரகாஷ், அப்துல் மாலிக், கஜேந்திரபிரபு, சீனிவாசன், பிரதீப்ராஜா, ஆனந்தகுமார், அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    • பணம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்கள் குவிந்தன
    • உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறு வதற்காக வேண்டி கோவி லில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளி நாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம்.

    இதற்காக இந்த கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி திறந்து எண்ணப் பட்டது. அதன்பி றகு கடந்த 40 நாட்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 40 நாட்களுக்கு பிறகு கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்ப ட்டன. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    • தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
    • ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல்

    திருவட்டார் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆனையாளர்கள் சசி, யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பீனாகுமாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் அனிதா குமாரி, ராம்சிங், ஜெபா, சகாய ஆன்றனி, ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொறியாளர்கள் சஞ்சிவ், பொன்ராஜன், கீதா, அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவட்டார் பேரூராட்சியில் அம்ருத் குடிநீர் திட்டத்திற்கு திருவட்டார் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை உடைத்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க இடம் அனுமதி வழங்குதல், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அயக்கோடு ஊராட்சியில் குறுக்குடி முதல் மனக்குன்று வரை ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலை அமைத்தல், கண்ணனூர் ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காப்பிகுளத்தில் பக்க சுவர் அமைத்தல், ஏற்றக்கோடு ஊராட்சியில் கூற்றவிளாகம் பகுதியில் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    அருமனை :

    அருமனை அருகே உள்ள செம்மங்காலையை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சிபி (வயது 18). இவர் மோட்டார் சைக்கிளில் மேல்புறம் அயக்கோட்டு பகுதியில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற வசந்தா (63), மனோகரன் (60) ஆகியோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சிபி உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை
    • சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளதால் சிப்பி எடுக்கும் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    குளச்சல் :

    குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இவற்றுகள் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

    இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் 'சிப்பி'மீன்கள் பிடிக்கப்படுகிறது.முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர்.குமரி மாவட்டத்தில் குளச்சல், கோடிமுனை, கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    தற்போது நவம்பர் மாதம் தொடங்கியும் குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை. இதனால் மேற்கூறிய பகுதியில் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். கடந்த 1-ந்தேதி முதல் குளச்சல் அருகே கோடிமுனை கிராமத்தில் ஒரு சில மீனவர்கள் சிப்பி மீன் எடுத்து வருகின்றனர்.

    இவர்களுக்கு சிப்பி மீன் குறைவாகவே கிடைத்தது.இன்று முதல் குளச்சல் சிப்பி மீன் தொழிலாளர்கள் சிப்பி மீன் எடுக்க தொடங்கி உள்ளனர். எடுத்து வரப்பட்ட சிப்பி மீன்களை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். சுமார் ஆயிரம் எண்ணம் கொண்ட ஒரு பெட்டி சிப்பி மீன்கள் காலையில் ரூ.5 ஆயிரம் விலை போனது. பின்னர் நேரம் போக போக விலை படிப்படியக குறைந்து ரூ.3 ஆயிரத்திற்கு விலைபோனது. இதனால் சிப்பி மீன் தொழிலாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

    கேரள வியாபாரிகள் அதிகமாக வந்தால்தான் போதுமான விலை கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த ஓகி புயல் தாக்குலுக்குப்பின்னர் சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தற்போது கோடிமுனை, இனயம் கிராமங்களில் மட்டும் சிப்பி எடுக்கும் தொழில் நடக்கிறது. இதனால் குமரி மாவட்டத்தில் சிப்பி எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளது. இந்த சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். ஆனால் இந்த வருடம் சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாகி உள்ளதால் ஒரு சில கேரள வியாபாரிகளே சிப்பி மீன்கள் வாங்குவதற்கு குமரி மாவட்டத்திற்கு வந்தனர். சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளதால் சிப்பி எடுக்கும் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    • மாலையில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க. கொடியை நாட்ட வந்தார்கள்.
    • 60 ஆண்கள், 5 பெண்கள் உட்பட மொத்தம் 65 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவட்டார் :

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பின்படி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. கொடிக்கம்பம் நாட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருவட்டார் அருகே சாமியார்மடம் பகுதியில் நேற்று மாலையில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க. கொடியை நாட்ட வந்தார்கள்.

    அதற்கு போலீஸ் அனுமதி வழங்கபட வில்லை. அனுமதியை மீறி அந்த பகுதியில் கொடிக்கம்பம் நட முயற்சி செய்தாக திருவட்டார் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேஸ், செறுகோல் ஊராட்சி மன்ற தலைவர் அனுசன் அய்யப்பன், திருவட்டார் ஒன்றிய பார்வை யாளர் சுவாமிதாஸ், திருவட்டார் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணசிங், காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஸ்ரீ உண்ணி சுரேஷ், செறுகோல் பகுதியை சேர்ந்த பிராங்கிளின், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஷீபா, திருவட்டார் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராகிலா, காட்டாத்துறை பகுதியை சேர்ந்த மகேஷ் உட்பட 60 ஆண்கள், 5 பெண்கள் உட்பட மொத்தம் 65 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்
    • அரசின் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்டது.

    குளச்சல் :

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) பங்குத்தாரராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளி கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். 28-ந்தேதி நள்ளிரவு விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாரா மல் திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர். இந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்டது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மீனவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

    இதையடுத்து நேற்று குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் சார்பில் மேற்கூறிய மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி விசைப்படகு சங்க அலுவலகத்தில் நடந்தது. கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கலந்துகொண்டு நிதிக்கான காசோலைகளை வழங்கி னார்.

    விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், செய லாளர் பிராங்கிளின், துணைத்தலைவர் ஆன்றனி, பொருளாளர் அந்திரியாஸ், துணைச்செயலாளர் ஆன்றனிதாஸ், நகரா ட்சி கவுன்சிலர்கள் ஜாண்ச ன், பனிக்குருசு மற்றும் விசைப்படகு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது

    நாகர்கோவில், நவ.6-

    வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிக அளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

    தற்போது தெருநாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது.

    இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங்களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.

    தெருநாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெருநாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்
    • மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அஞ்சு கூட்டுவிளை பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் சில்வஸ்டர் (வயது 70), மீனவர். இவருக்கு மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கால் வழுக்கி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சில்வஸ்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சட்ட மன்றத் தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டார். கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட அனைத்து பூத் பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றும் பூத் நிர்வாகி களை அந்தந்த பூத்களில் அமைத்தும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களை பூத் பணிகளில் பணி யாற்றிடவும், வெகு விரைவில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்து தலைமைக்கு விரைவில் வழங்கிட பணியாற்றிட வேண்டும். தற்போது நடைபெற்று வருகின்ற புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமில் 3 தொகு திக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் நேரடியாக சென்று வாக்காளர் சேர்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மருங்கூர் பேரூராட்சி பகுதியில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருங்கூர் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    இந்த கூட்டங்களில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சிவசெல்வராஜன், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு என்ற ஜெயசந்திரன், மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் தாணு பிள்ளை, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நரசிங்கமூர்த்தி, மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, கழக நிர்வாகிகள், ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு பார்வையிட்டார்
    • சிறப்பு முகாம்களுக்கு சென்று புதிய வாக்காளர் சேர்ப்பு பணியினை பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்டஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில்புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பார்வையாளர் நம்பி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் இந்த சிறப்பு முகாம்களுக்கு சென்று புதிய வாக்காளர் சேர்ப்பு பணியினை பார்வையிட்டனர்.

    கவுன்சிலர் சுஜா அன்பழகன், மாவட்ட தி.மு.க. அணிகளின் துணை அமைப்பாளர்கள் அன்பழகன், பொன் ஜான்சன், தமிழன் ஜானி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நாஞ்சில் மைக்கேல், அக ஸ்தி யலிங்கம், தாமரை பிரதாப், கிருஷ்ண குமார், தாமஸ்ஷியாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட வைகளுக்கு ஏராளமா னோர் வி ண்ண ப்பம் அளி த்தனர்.

    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் நினைவு மண்ட பமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறை யில் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வரு கிறார்கள்.

    இந்தநிலையில் திரு வள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 4 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து இயக்கப்பட்ட வில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவே கானந்தா ஆகிய 3 படகு களில் குகன் படகு பழுத டைந்த நிலையில் இருந்த தால் கடந்த மாதம் அதனை சின்ன முட்டம் துறை முகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீர மைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகும் சீரமைப்பு பணி முடிந்து கடந்த மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்கு கிறது. இதைத்தொடர்ந்து விவேகானந்தா என்ற மற்றொரு சுற்றுலா பட கையும் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்க ழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தா என்ற சுற்றுலா படகு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல்வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப் பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீர மைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன்பிறகு சபரிமலை சீசனையொட்டி அடுத்த வாரம் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

    ×