என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்
    X

    மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

    • கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜெனிகர் பிரபு (வயது 40) பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் ஜெனிகர் பிரபு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆசிரியர் ஜெனிகர் பிரபு கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×