வெள்ளமடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

அவருக்கு ஜானகி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வெள்ளமடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
Published on

ஆரல்வாய்மொழி :

ஆரல்வாய்மொழி வெள்ளமடம் அருகே வேம்பத்தூர் காலனி செல்லப்பன் (வயது 70), விவசாயி. சம்பவத்தன்று இவர் வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெள்ள மடம் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் செல்லப்பன் தூக்கி வீசப் பட்டார். அக்கம்பக்கத்தி னர் அவரை மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பரிதாப மாக இறந்தார். அவருக்கு ஜானகி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com