காஞ்சிரபுரம் சேகரம் சார்பில் ராலி பெருவிழா

அகில உலக ஓய்வு நாள் பாடசாலை தினம்சிறப்பு விருந்தினராக போதகர் ராஜபக்தசிங் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.
காஞ்சிரபுரம் சேகரம் சார்பில் ராலி பெருவிழா
Published on

மார்த்தாண்டம் :

அகில உலக ஓய்வு நாள் பாடசாலை தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திருச்சபை குமரி பேரராயம் மார்த்தாண்டம் காஞ்சிரபுரம் சேகரம் சார்பில் 7 திருச்சபைகள் பங்கேற்ற ராலி பெருவிழா நடைபெற்றது.

காஞ்சிரபுரம் சேகரத்து போதகர் முத்துசாமி கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கினார். மருதூர் குறிச்சி போதகர் ரெஞ்சித்வேத குமார் முன்னிலை வகித்தார். பவனியை காட்டத்துறை திருச்சபை வளாகத்தில் வைத்து சேகரத்துக்குட்பட்ட போதகர்கள் புறாவை பறக்க விட்டு தொடங்கி வைத்தனர். பவனியானது மருதூர் குறிச்சி திருச்சபையில் முடிவடைந்து சிறப்பு கூடுகையும் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக போதகர் ராஜபக்தசிங் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தை சேக ரத்துக்குட்பட்ட அனைத்து திருச்சபை போதகர்கள், சேகர திருமறை பள்ளி செயலாளர் பிறேம் ஜெயக்குமார், சேகர திருமறைப்பள்ளி கணக்கர் சுனிதா, மருதூர் குறிச்சி திருமறைப்பள்ளி சேகர செயலாளர் லாறன்ஸ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com