என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
    • கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசன் காலத்தில் கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கோவளம் ரோட்டில் இருந்து கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதியில் 73 சீசன் கடைகளும், கன்னியா குமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பு இருந்து காந்தி மண்டபம் முன்புஉள்ள முக்கோண பூங்கா சந்திப்பு வரை உள்ள மெயின் ரோட்டின் மேற்கு பகுதியில் 27 சீசன் கடைகளும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு பகுதியில் 23 சீசன் கடைகளும் ஆக மொத்தம் 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

    இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சிரஸ்தார் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகி யோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும் சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு கார் பார்க்கிங் வசதி கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதி மற்றும் சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் உள்ள கார் பார்க்கிங் இடம் ஆகிய இடங்களில் கட்டண கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவற்றை பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் சீசனையொட்டி ஏலம் மூலம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ.22 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதனை மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இந்த கார் பார்க்கிங் அருகில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை ஒற்றையால்விளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    இதேபோல கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை சுக்குப்பாறை தேரிவிளையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    • தலைமறைவான வாலிபரை பிடிக்க கேரளா விரைந்த போலீசார்
    • 2 வாலிபர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதை பார்த்தனர்.

    :குழித்துறை 

    மார்த்தாண்டம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், தலைமை காவலர் சகீர் மற்றும் போலீசார், தீபாவளியன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நட்டாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது, 2 வாலிபர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதை பார்த்தனர்.

    அவர்களை, சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கண்டித்தனர். அப்போது போதையில் இருந்த 2 பேரும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 24), அனீஷ் ஆகியோர் தான் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அஜித் கைது செய்யப்பட்டார். அனீஷ் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனீஷை பிடிக்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதி துண்டான நிலையில் நேற்று காலையில் கிடந்தது. இதை பார்த்து காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்ட தகவல் மாவட்டம் முழுவதும் பரவி யது. இதையடுத்து விஜய் வசந்த் எம்.பி., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், தோவாளை வட்டார காங் கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    போலீசார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். இது தொடர்பாக அருமநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சஜூன் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்தனர்.

    பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது மதுபோதையில் ராஜீவ் காந்தி சிலையை சேதப்ப டுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சஜூனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜூன் நாகர்கோவில் ரெயில்வே யில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.
    • போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜிஜோ. இவர் சுய உதவி குழுவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஜிஜோ சுய உதவி குழுவில் இருந்து கொடுக்கப்படும் கடன் தொகையை வசூலிக்கும் வேலையையும் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவருக்கு சுய உதவி குழுவில் இருந்து லோன் கொடுத்துள்ளனர். வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று லோன் தொகையினை வசூலிப்பதற்காக ராஜகுமாரின் வீட்டுக்கு ஜிஜோ சென்றுள்ளார். அப்போது ராஜகுமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் லோன் தொகை வசூலிக்க சென்ற ஜிஜோவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜகுமார் திடீரென ஜிஜோவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜிஜோ களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மது போதையில் சுய உதவி குழு ஊழியரை வாலிபர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பாபுவுக்கு திருமணமாகவில்லை.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பாபுவுக்கு திருமணமாகவில்லை. தனது தம்பி வீட்டில் வசித்து வந்த அவர், சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்கு சென்றுள்ளார்.

    அதன் பிறகு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • குழந்தையை கடத்த முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்
    • சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் சுற்றி திரிவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது‌.

    நாகர்கோவில், நவ.14-

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியின ரின் 2½ வயது குழந்தை ஒன்று காய்ச்சலால் பாதிக் கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருந்தது.

    அப்போது ஆஸ்பத்தி ரிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை சிகிச்சை பெறும் அறைக்குள் சென்று குழந்தையை தூக்கி செல்ல முயன்றதாக அவரது பெற்றோர் புகார் செய்தனர். இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் சுற்றி திரிவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வடசேரி போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    தனிப்படை போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அருகு விளையை சேர்ந்த சிவா என்பவர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடு வது அறிந்த சிவா தலை மறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவாவை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரி டம் விசாரணை நடத்தப் பட்டது. சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்குள் திருடச் சென்றதாகவும் குழந்தையை கடத்த செல்லவில்லை என்று கூறினார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    சிவா ஏற்கனவே சிறிய சிறிய திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிவாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மாத்திரைகள்
    • விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியில் இருந்து மணக்கரை வழியாக வில்லுக்குறி செல்லும் வழியில் இந்த ஆண்டு (2023) காலாவதியாகும் கால்சியம் மாத்திரைகள் பெட்டியோடு கேட்பாரற்று கிடந்தன.

    தமிழ்நாடு அரசு இலவசமாக ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இந்த கால்சியம் மாத்திரைகள் குப்பைக்குள் கிடந்தது எப்படி என்று தெரியவில்லை.

    கால்சியம் மாத்திரைகள் இவ்வாறு வீணடிக்கப் பட்டது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

    நாகர்கோவில், நவ.14-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.விற்குட் பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை விரைவாக அமைப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் நாகர் கோவிலில் நடைபெற்றது. அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன் னாள் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. விற்குட்பட்ட கன்னியா குமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை ஏற்கனவே கூறியபடி விரைவாக அமைத்து, பூத் கமிட்டி புத்த கத்தினை வருகிற 18-ந்தேதிக் குள் கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பது, குமரி மாவட்ட பத்திரப்பதிவில் நிலத்திற்குரியவர்கள் 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொது மக்களை யும் திரட்டி கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது.

    தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணி களை விரைவில் முடிப்பதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பச்சைமால், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாணவரணி செயலாளர் மனோகரன், குமரி மாவட்ட இளைஞரணி, இளம்பெண் பாசறை செய லாளர் அக் ஷயாகண்ணன், பகுதி செயலா ளர்கள் ஜெயகோபால், ஜெபின் விசு, ஸ்ரீலிஜா, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக் குமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரபீக், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் பிரிவு செயலாளர் ஆறுமுகராஜா, நிர்வாகி பசலியான் நசரேத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பகுதி செயலாளர் முருகேஸ்வரன் நன்றி கூறினார்.

    • 3 அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • 2000 குளங்கள் நிரம்பி வழிகிறது

    நாகர்கோவில், நவ.14-

    குமரி மாவட்டத்தில் தினமும் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவில், முள்ளங்கினாவிளை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. கன மழை குறைந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. இதனால் பேச்சிப் பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவி யில் ஆனந்த குளியலிட்டனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.80 அடியாக உள்ளது. அணைக்கு 365 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது.

    அணைக்கு 361 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.51 அடியாக உள்ளது.

    அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே நடவு பணி நடைபெற்ற நிலையில் பூதப்பாண்டி, அருமநல்லூர், சுசீந்திரத்தின் ஒரு சில பகுதிகளில் நடவு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    விவசாயிகளுக்கு தேவை யான உரங்களை தங்குதடை யின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயி களுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    • கீழவண்ணான்விளை வேங்கை நற்பணி மன்றத்தின் 36-வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி தின விழா மன்ற வளாகத்தில் கொண்டா டப்பட்டது
    • எஸ்.சுயம்புலிங்கம் தலைமையில் செண்டை மேளம் முழங்க சிலம்பாட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை வேங்கை நற்பணி மன்றத்தின் 36-வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி தின விழா மன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது. எஸ்.சுயம்புலிங்கம் தலைமையில் செண்டை மேளம் முழங்க சிலம்பாட்டம் நடைபெற்றது.

    நேற்று ஆலடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடும் மற்றும் சிறுவர், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சு போட்டி மற்றும் வினாடி-வினா போட்டியும், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் மற்றும் பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்திற்கு கீழவண்ணாவிளை ஊர் தலைவர் டி.சுந்தரேசன் தலைமை தாங்கினார். வேங்கை நற்பணி மன்றத்தின் இணை செயலாளர் சிவசுந்தர் வரவேற்றார். துணை தலை வர் எம்.குமார் மன்ற ஆண்ட றிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி யின் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன், மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி யின் 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூரபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    கீழவண்ணான் விளையை சேர்ந்த ஆர்.அன்பையா, சி.சுயம்பு ராஜன், வேங்கை நற்பணி மன்றத்தின் தலைவர் டி.ராஜாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேங்கை நற்பணி மன்றத்தின் செயலாளர் ஐ. ஆனந்த் நன்றி கூறினார். பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை வேங்கை நற்பணி மன்ற நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும், மன்ற உறுப்பினர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • நடிகர் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு திரைப்படம் நாகர்கோவில் வள்ளி திரையரங்கில் திரையிடப்பட்டது.
    • பிரபு அறக்கட்டளையின் தலைவர் சி.டி.ஆர்.சுரேஷ் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

    நாகர்கோவில் : நடிகர் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு திரைப்படம் நாகர்கோவில் வள்ளி திரையரங்கில் திரையிடப்பட்டது. அதன் முதல் நாள் நிகழ்ச்சியில் திரைப்படத்தை பார்த்து கண்டுகளிக்க வந்த ரசிகர்களை குமரி மாவட்டபிரபு அறக்கட்டளையின் தலைவர் சி.டி.ஆர்.சுரேஷ் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு மன்ற தலைவர் கருத்திருமன், செயற்குழு உறுப்பினர்கள் சுரேந்திரன், சுந்தர், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளையின் செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் 46-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வீரசூரபெருமாள், துணை செயலாளர்கள் சத்யன், சுகுமாரன், சட்ட ஆலோசகர் வக்கீல் ரெங்கன், செயற்குழு உறுப்பினர் பாபு வெங்கடேஷ் மற்றும் குமரி மாவட்ட நடிகர் சிவாஜி கணேசன் நற்பணி மன்ற நிர்வாகிகள், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளையின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி
    • மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார்.


    நாகர்கோவில் :அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி (வயது 45). இவரும், இவரது மகள் தமிழிசை (25) என்பவரும் நேற்று மாலை காவல்கிணற்றில் இருந்து தனது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் கன்னி விநாயகர்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளை டாஸ்மாக் மதுக்கடை அருகில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே கிருஷ்ணன்புதூரை சேர்ந்த டூலிப் ஆன்றோ (34) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பத்மாவதியும், தமிழிசையும் தூக்கி வீசப்பட்டனர். இதற்கிடையில் பின்னால் வந்த வாகனம் ஒன்று பத்மாவதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பத்மாவதி தனது மகள் தமிழிசை கண் எதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் தமிழிசை புகார் செய்தார். அதன்பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×