என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்ட விஜய் வசந்த்
    X

    திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்ட விஜய் வசந்த்

    • மூவர் ஜீவ சமாதியில் விஜய் வசந்த் பிரார்த்தனை செய்தார்.
    • ஏழு நாட்களும் மூன்று வேளை அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர் மூவர் ஜீவ சமாதியில் பிரார்த்தனை செய்தார்.

    தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏழு நாட்களும் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று கோவிலுக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    Next Story
    ×