என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு
    • பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மண லிக்கரை இலங்கம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் நாயர் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று காலையில் ரத்த வாந்தி எடுத்ததால் உறவினர்கள் அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசேதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் உடலை உறவினர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். முன்னாள் ராணுவ வீரர் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வேண்டும் என டாக்டரிடம் கூறியுள்ளனர்.

    அதற்கு டாக்டர் போலீஸ் வந்தால் தான் எங்களால் உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப முடியும் என கூறினார். இதனால் உறவினர்கள் கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசார் வராததால் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது எங்கள் பகுதியில் நடக்காததால் நாங்கள் வரமுடியாது என குலசேகரம் போலீசார் தெரிவித்தனர். இப்படியாக இறந்த ராணுவ வீரர் உடல் புறநோயாளிகள் பகுதியில் திறந்த நிலையில் வெகு நேரமாக காத்திருந்தது.

    இதை அறிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கொற்றிகோடு போலீசார் வந்து உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று காலையில் இவரின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. கொற்றிகோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.
    • 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் நேற்று இரணியல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.

    அதனை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் இர்வின்பால் (வயது 25) என்பதும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போக்கு வரத்து போலீசார் நட வடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.

    • பெருஞ்சாணியில் 14.8 மில்லி மீட்டர் பதிவு
    • சிற்றார்-1 அணை 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் குறைவான அளவு தண்ணீர் உள்ளது.

    மேலும் பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, இரணியல், அடையாமடை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 14.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு வெயில் வழக்கம்போல் சுட்டெரித்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 32.95 அடியாக உள்ளது. அணைக்கு 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 690 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 25.65 அடியாக உள்ளது. அணைக்கு 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.26 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 5.8, பெருச்சாணி 14.8, சிற்றார் 1 -10.2, சிற்றார் 2-8, நாகர்கோவில் 7.4, பூதப் பாண்டி 7.2, சுருளோடு 8.4, கன்னிமார் 3.4, பாலமோர் 11.2, மயிலாடி 3.6, கொட்டாரம் 5.2, இரணியல் 6.2, ஆணைக் கிடங்கு 8.4, குளச்சல் 8, குருந்தன்கோடு 4, முள்ளாங்கினாவிளை 6.2, புத்தன் அணை 12, திற்பரப்பு 8.2.

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 30-ந்தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    நாகர்கோவில் ஏ.ஆர். கேம்ப் சாலையில் புனித அல்போன்சா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி வைத்து ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சாமி மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவின் 28-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 9 மணிக்கு சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருட்தந்தை தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், திருப்பலி நிறைவேற்றினார். 10.30 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்வுகள், மாலை 6 மணிக்கு பேரருட்தந்தை கிறிஸ்துதாஸ் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். இதில் நாகர்கோவில் திரு இருதய ஆலய பங்குத்தந்தை ஜாண் கென்னடி, குழித்துறை மறைமாவட்ட அருட்தந்தை டேவிட் மைக்கிள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    29-ந்தே 6 மணிக்கு அருட்தந்தை ஆன்டணி மாடப்புரைக்கல் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு படந்தாலுமூடு திரு இருதய மறைவட்ட ஆலய பங்குத்தந்தை தோமஸ் சத்யநேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மேலபெருவிளை புனித ஜெபமாலை மாதா ஆலய பங்குத்தந்தை குரூஸ் கார்மல் மறையுரையாற்றினார். இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியானக்குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30 மணிக்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு அருட்தந்தைகள் பிரின்ஸ் சேரிப்பனாட்டு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்தந்தை அஜின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை புனித அல்போன்சா திருத்தல அதிபர் சனில் ஜோண் பந்திச்சிறக்கல், துணை பங்குத்தந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தரப்பேல், ராஜையன், ஜோ பெலிக்ஸ் மலையில் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகிறார்கள்.

    • 25-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது.
    • 26-ந்தேதி உற்சவமூர்த்திகளுக்கு நீராட்டு நடக்கிறது.

    முப்பந்தல் அருகே ஆலமூடு அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூக்குழி கொடைவிழா ஒவ்வொறு வருடமும் ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பூக்குழி கொடைவிழா வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் 23-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை தொடர்ந்து அகண்ட நாம ஜெபம், 8 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசைகள் செய்துவிட்டு, அம்மன்ஜோதி அலங்கரிக்கபட்ட ரதத்தில் கிருஷ்ணம்மாள் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, இரவு 10 மணியளவில் ஆலமூடு கோவில் வந்தடைதல். மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அம்மன் ஜோதிக்கு சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடக்கிறது.

    விழாவில் 24-ந் தேதி காலை 8 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 4 மணிக்கு அம்மன் சிங்கவாகனத்தில் பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

    25-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று அருகே உள்ள குட்டிகுளத்து இசக்கியம்மன் கோவில்-பிள்ளையார் கோவிலில் இருந்து பூங்கரகம், அபிஷேக குடங்கள், முளைபாத்தி, வேல் குத்து, பறவை காவடி, சூரிய காவடியுடன் பக்தர்கள் பஜனை மற்றும் மேளதாளங்களுடன் ஆலமூடு அம்மன் கோவில் வருதல். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.

    காலை 8 மணிக்கு அம்மன் சன்னதியில் 108 கலசங்களுடன் கலச பூஜை, 11 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து அன்னதானம், 12.30 மணிக்கு சாமிகள் பாயாச குளியல், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 4 மணிக்கு அக்னிசட்டி எடுத்தல், 5 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், இரவு 7 மணிக்கு பூக்குழி பூஜையும், அக்னி வளர்த்தலும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பூப்படைப்பு, 1 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அதிகாலை 3 மணிக்கு ஊட்டு படைத்தல் நடக்கிறது.

    26-ந் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு நீராட்டு, மதியம் 2.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருஷ்டி பூஜை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ.அருணாசலம் தலைமையில் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • உம்மன் சாண்டியின் உடல் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.
    • இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர்.

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி (வயது79), புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார். உம்மன்சாண்டியின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து பெங்களூரு இந்திராநகரில் உள்ள அவரது நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் உம்மன் சாண்டியின் உடல் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அவரது இறுதி ஊர்வலத்திலும் விஜய் வசந்த் பங்கேற்றார். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர்.


    • சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை
    • 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இரவு பகலாக சாலையில் லாரிகள் செல்வதால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவ தோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிக பாரம் ஏற்றி செல்லும் வாக னங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் கொண்ட குழு, படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வழியாக வந்த 5 வாகனங்களை நிறுத்தினர்.

    அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு வாகனங்களை சோ தனை செய்தது. அப்போது அந்த வாகனங்களில் அனுமதி இல்லாமல் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்புலன்ஸ்-சரக்கு வாகனம் மோதியதில் போக்குவரத்து கடும் பாதிப்பு
    • காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பறக்கை சந்திப்பு சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

    அது ரோட்டோரம் நிறுத் தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது. இதில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் நின்ற மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் டயரும் ஆம்புலன்சின் டயரும் பலத்த சத்தத்துடன் வெடித்தது. விபத்தில் சிக்கிய இருவாகனங்களும் நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    • தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஆன்லைன் லாட்டரி விற்பனை மட்டுமின்றி கேரளா லாட்டரி சீட்டுகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அதிரடி சோ தனை மேற்கொண்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். விசாரணையில் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லாட்டரிசீட்டு விற்பனை நடைபெற்று வரும் கடையில் வேலை பார்த்த பெண்க ளுக்கு தனியாக செல்போன் வாங்கி கொடுத்து உள்ளனர். அந்த செல்போன் மூலமாக லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் தினமும் வந்து லாட்டரி சீட்டு வாங்காத பட்சத்தில் பெண்களே தொடர்பு கொண்டு பேசி லாட்டரி சீட்டுகளை வாங்கு மாறு தெரிவித்துள்ளனர். செல்போன் மூலமாக அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று உள்ளது.

    குறிப்பிட்ட அளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் விற்பனை செய்தவர்களுக்கும் கமிஷன் வழங்கப்பட்டு உள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிக்கு புதிதாக நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ரகசிய குறியீட்டு எண்களும் பயன் பத்தப்பட்டுள்ளது. அலாரம் உள்பட சிவப்பு பச்சை லைட்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளது.

    லாட்டரி சீட்டு விற்பனையின் பின்னணியில் உள்ள வர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்டரி சீட்டு விற்பனை செய்த பகுதியில் சோதனை நடத்தி 2 நாட்களே ஆன நிலையில் மீண்டும் நாகர்கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆனால் போலீசார் இதை கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • டெம்போவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது மின் வயர் விழுந்தது.
    • மின்வயர் அறுந்து விழுந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புத்தேரியில் இருந்து வடசேரி நோக்கி டெம்போ ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. வடசேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், டெம்போவின் மேல் பகுதி அந்த வழியாக சென்ற மின் வயர் மீது உரசியது.

    இதில் மின் வயர் அறுந்தது. டெம்போவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது மின் வயர் விழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கூச்சலிட்டனர்.

    மின்வயர் அறுந்து விழுந்தபோது தீப்பொறியும் கிளம்பியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த தாய்-மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்தனர். அவர்களது இருசக்கர வாகனம் அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையின் மீது விழுந்தது. அறுந்து விழுந்த மின்வயரில் தொடர்ந்து மின்சாரம் வந்து கொண்டிருந்தது.

    இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரோட்டில் மின் வயர் அறுந்து கிடந்ததையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் ஏராளமான பொது மக்களும் திரண்டனர்.

    மின்வயர் அறுந்து விழுந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.

    பின்னர் போக்குவரத்து சீரானது. அறுந்து விழுந்த மின் வயரை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்வயரை அறுத்துவிட்டு நிற்காமல் சென்ற டெம்போவை போலீசார் தேடி வருகிறார்கள். மின்வயர் மேலே அறுந்து விழுந்ததும் தாய்-மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் வடசேரியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேதமடைந்து கிடந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க உத்தரவு
    • தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேப்ப மூடு பூங்காவை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுவதாகவும் குப்பைகள் அதிக அளவு உள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மேயர் மகேஷ் இன்று காலை வேப்பமூடு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    சேதமடைந்து காணப்பட்ட விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட அவர், இதை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்கா முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டபோது பூங்காவிற்குள் புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. அதை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். அங்கு உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி காணப்பட்டதை பார்த்த அவர், தினமும் அகற்ற அறிவுறுத்தினார்.

    கழிவறைக்கு சென்று பார்வையிட்ட மேயர் மகேஷ், தினமும் சுத்தம் செய்து பராமரிக்க உத்தர விட்டார். கழிவறையின் மேல் வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பூங்காவிற்கு வெளிப்புறம் உள்ள நாஞ்சில் பஜாரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கடையின் முன் பகுதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து செட்டுகள் அமைத்திருந்தனர். மேலும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் தற்காலிக கடைகள் அமைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். நாஞ்சில் பஜாரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேப்பமூடு பூங்காவிற்கு நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது.

    அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாஞ்சில் பஜாரில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் மாநகராட்சி சார்பில் நாளை ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 53 பூங்காவையும் புணரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது. போது மான அளவு மழை பெய்யா ததால் பாசன குளங்களில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெப்பத்தின் தாக்கம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை தூறியது. மயிலாடி, குழித்துறை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் ஒரு மணி நேரமாக மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்ச மாக 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 33.22 அடியாக இருந்தது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.20 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணையில் இருந்து 937 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தோவாளை, அனந்தனார், நாஞ்சில் நாடு புத்தனார் சானல்களில் ஷிப்ட் முறையில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகள் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×