என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஒருவர் சிக்கினார்; மற்றொருவர் தப்பி ஓட்டம்
    • போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார்

    இரணியல், ஜூலை.20-

    கண்டன்விளையை சேர்ந்தவர் பிரபா. இவர் இன்று காலை மருத்துவ மனைக்கு செல்வதற்காக கண்டன்விளையில் இருந்து அரசு பஸ்சில் நாகர்கோவி லுக்கு புறப்பட்டு சென்றார். பஸ்சில் அவரது பின்னால் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நின்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தோட்டியோட்டில் இறங்கினர்.

    இதையடுத்து தோட்டி யோட்டில் இருந்து பஸ் சென்றது. அப்போது பிரபா தனது பர்சு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பஸ்சை நிறுத்த கூறினார். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்பு பிரபா பஸ்சில் இருந்து இறங்கி தோட்டியோடு பஸ் நிறுத்தத்திற்கு ஓடி வந்தார்.

    அப்போது இரு பெண்களில் ஒருவர் திங்கள் நகர் வந்த பஸ்சில் ஏறினார். இதனை அறிந்த பிரபா அங்கு நின்ற போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார் என கூறினார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் அங்கு நின்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று பரசேரியில் பஸ்சை மடக்கி நிறுத்தினர். பின்னர் அந்த பெண்ணை பிடித்து விசா ரித்தனர்.

    இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசா ரணை நடத்தினர். விசார ணையில் அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 31) என்பதும், பர்ஸை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவான மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.

    • போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
    • 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு வரி தொடர்பாக அதிக அளவு மனுக்கள் வந்திருந்தது. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே ஒரு சில சாலைகள் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வடசேரியில் இருந்து மணிமேடை வரை உள்ள சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    அதற்கான அளவீடு பணி நடந்து வருகிறது. போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் போர்டு வைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான போர்டு மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டு போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்பொழுது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதல் கட்டமாக 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக மீட்டர் வந்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும். புத்தன் அணை குடிநீர் திட்டத்தை தெங்கம்புதூர் பகுதியில் செயல்படுத்த ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் பிரச்சி னையை சமாளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தன் அணையில் இருந்து பரிசோதனைக்கு வரக்கூடிய 22 மில்லியன் லிட்டர் தண்ணீரை கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பொது மக்களுக்கு சப்ளை செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் பட்சத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி ராம் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உடல் நலம் பாதித்த மனைவிக்கு பதிலாக போனவர்
    • நாகர்கோவிலில் இன்று பரிதாபம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள கீழகோணம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 49). இவரது மனைவி முத்துசெல்வம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்து செல்வம் நாகர்கோவில் மாநக ராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    முத்து செல்வத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது பணியை கணவர் பரமசிவம் மேற்கொண்டார். இன்று காலை பரமசிவம் கோணம் கம்பி பாலம் பகுதியில் கால்வாயில் முட்புதர்களை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் கிடந்த விஷ பாம்பு பரமசிவத்தை கடித்தது.

    இதையடுத்து அவர் கூச்சலிட்டார். உடனே பணியில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரமசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். பரமசிவத்தின் உடல் பிரேத  பரிசோதனைக்கு ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூய்மை பணியின் போது ஒருவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் மாநகராட்சி ஊழியர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை

    குளச்சல், ஜூலை.20-

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வந்தார். சிகிச்சைக்கு வந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர்கள், சிகிச்சை அளித்தபோது குழந்தை பெற்ற பெண்ணுக்கு 17 வயதே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரள் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து அவர், சிறுமியை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார். இதில் தான் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக மருத்துவமனை போலீசார், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை கர்ப்பமாக்கியது தொடர்பாக அவரது தாயாரிடம் புகார் பெற்று மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

    • காய்கறிகளை மாலையாக அணிந்து பங்கேற்ற பெண் நிர்வாகிகள்
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில் :

    மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அனைத்து துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அவை தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், சிவ செல்வராஜன், மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், சாந்தினி பகவதியப்பன், பார்வதி, ஆர்.ஜே.கே. திலக், பகுதிச் செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், ஜெய சுதர்சன், மாமன்ற உறுப்பினர்கள் கோபால சுப்பிரமணியம், சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விலை வாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாரி, இஞ்சி, தக்காளி, மிளகாய் மற்றும் பருப்பு ஆகியவற்றை வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காய்கறிகளை வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், குளச்சல் நகர செயலாளர் ஆ ண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா கழுத்தில் தக்காளியை மாலை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் வெண்டைக்காயை மாலையாக அணிந்திருந்தார். இதே போல் பெண்கள் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கலந்து கொண்டதால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆய்வுக்கு பிறகு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு உறுதி
    • மாணவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் குமரி மாவட்டம் வந்தனர்.

    குழுவின் தலைவர் அன்பழகன் தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலையில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மணக்குடி பகுதியிலும் இந்த குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். இன்று 2-வது நாளாக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குழு தலைவர் அன்பழகன் தலைமையில் உறுப்பினர்கள் காந்தி ராஜன், சந்திரன், சிந்தனை செல்வன், சிவகுமார், சேவூர் ராமச்சந்திரன், தளபதி, நாகை மாலி, பரந்தாமன், பூமிநாதன், ஓ.எஸ்.மணியன், ராஜேஷ் குமார் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காசநோய் பிரிவிற்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தனர். ரத்த சேமிப்பு கிடங்கையும் சென்று இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு எத்தனை யூனிட் ரத்தம் இருப்பு உள்ளது, மாதம் எவ்வளவு ரத்தம் யூனிட் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கொட்டாரம் அரசு பள்ளியில் ஆய்வு செய்த போது, மாணவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை விளையாட்டு மைதானத்திற்கு பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கீழமனக்குடி, மேலமனக்குடி பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கன்னியாகுமரி பகுதியில் தூண்டிவளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு உட்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.17 கோடி செலவில் மாணவ-மாணவிகள் விடுதி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதேபோல் நீரோ சிகிச்சை மையம் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அந்த குறைபாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதை தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அந்த குழுவினரிடம் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மனு ஒன்றை அளித்தார். கன்னியாகுமரி மற்றும் வாவத்துறை பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

    • மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்ததில் கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு கருவஞ்சான் விளையை சேர்ந்தவர் வில்பிரட் சேம் (வயது 51).

    இவர் பரக்குன்று பகுதியில் உள்ள மர அறுவை மில்லில் பணிபுரிந்து வந்தார். இவரது மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்ததில் கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வில்பிரட் சேம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஓமனா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
    • பணம் பறித்தது வில்லுக்குறி சடையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (51) என்பது தெரிய வந்தது

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர அய்யாத்துரை (வயது 47).

    கூலித்தொழிலாளியான இவர், நேற்று தக்கலை அருகே உள்ள குமாரகோவில் பகுதிக்கு வேலைக்கு ெசன்றார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். குமாரகோவில் விலக்கு அருகே வந்தபோது அவரை ஒருவர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.

    இது குறித்து தகக்லை போலீஸ் நிலையத்தில் அய்யாத்துரை புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், அய்யாத்துரையிடம் பணம் பறித்தது வில்லுக்குறி சடையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (51) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது தக்கலை, இரணியல், குளச்சல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • 2 பேருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.
    • குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உள்ள அண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (வயது 71). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ராதா கிருஷ்ணன் வீட்டின் பின்பக்கம் வாயில் நுரை தள்ளியவாறு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே இவர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பினத்தை கைப்ற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பபடிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வந்தி ருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள 215 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.

    ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் தினமும் காலை 40 பேருக்கும், மாலை 40 பேருக்கும் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.

    இதேபோல் தோவாளை தாலுகாவில் 59 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கல்குளம் தாலுகாவில் 126 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் இன்று 400 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்ட பொது மக்கள் அந்த விண்ணப்ப படிவங்களை முகாம் நடை பெறும் அன்று வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முகாம் நடைபெறும் பகுதியில் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கும் தன்னார் வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவார்கள்.

    எனவே பொதுமக்கள் முகாம் நடைபெறும் அன்று விண்ணப்ப படிவங்களை அதற்கான ஆவணங்களுடன் அந்த இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் 400 ரேஷன் கடைகளில் மகளிர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் கள் வழங்கப்பட்டது.

    2-வது கட்டமாக முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு அடுத்த கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
    • கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கனிம பாதுகாப்பு திட்ட தாசில்தார் தினேஷ் சந்திரன் மற்றும் ஊழியர்கள் கொல்லங்கோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவுக்கு கடத்தல்

    ஊரம்பு சந்திப்பில் அவர்கள் நின்ற போது கனிம வளம் ஏற்றிய டாரஸ் லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி தனி தாசில்தார் விசாரித்தார். அனுமதிக்கப்பட்டிருந்த நடைச்சீட்டை வாங்கி பார்த்த போது கொல்லங்கோடு பகுதிக்கு என்று இருந்தது.ஆனால் அதனை மறைத்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக தனி தாசில்தார் தினேஷ் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம்
    • குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    பேச்சிப்பாறை அருகே முக்கறைக்கல் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக புலிகள் அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது.

    குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து நாய், ஆடுகளை கொன்றதால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி தெரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 2 இடங்களில் கூண்டு அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் புலியை பிடிக்க புது வியூகம் வகுத்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் நேற்று அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது ஆடு, மாடுகளை ஆங்காங்கே கட்டுவதால் புலிகள் கடித்து கொன்று வருகிறது. எனவே அவற்றை ஒரே இடத்தில் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் காம்பவுண்டின் உள்பகுதியில் ஆடு, மாடுகள் கட்டப்பட்டுள் ளது. சுமார் 20 மாடுகள், 40 ஆடுகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த பகுதியை வனத்துறை அதி காரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் புலியை பிடிக்கும் வகையில் ஆட்டுக்கொட்டகை போன்ற தோற்றம் உடைய கூண்டு ஒன்றை வடிவமைத்து 2 இடங்களில் வைத்துள்ளனர். அந்த கூண்டுக்குள் 2 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் அந்த கூண்டை வனத்துறை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் புலி பிடிப்பதற்கு வெளியூரிலிருந்து சிறப்பு குழுவினரை அழைத்து வரவும் நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கோவையில் இருந்து புலியை பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற குழுவினர் விரைவில் இங்கு வர உள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.

    ×