search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • காய்கறிகளை மாலையாக அணிந்து பங்கேற்ற பெண் நிர்வாகிகள்
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில் :

    மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அனைத்து துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அவை தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், சிவ செல்வராஜன், மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், சாந்தினி பகவதியப்பன், பார்வதி, ஆர்.ஜே.கே. திலக், பகுதிச் செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், ஜெய சுதர்சன், மாமன்ற உறுப்பினர்கள் கோபால சுப்பிரமணியம், சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விலை வாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாரி, இஞ்சி, தக்காளி, மிளகாய் மற்றும் பருப்பு ஆகியவற்றை வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காய்கறிகளை வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், குளச்சல் நகர செயலாளர் ஆ ண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா கழுத்தில் தக்காளியை மாலை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் வெண்டைக்காயை மாலையாக அணிந்திருந்தார். இதே போல் பெண்கள் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கலந்து கொண்டதால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×