

கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே உள்ள அண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (வயது 71). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராதா கிருஷ்ணன் வீட்டின் பின்பக்கம் வாயில் நுரை தள்ளியவாறு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே இவர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பினத்தை கைப்ற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.