என் மலர்
கன்னியாகுமரி
- அணைகளுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது
- மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை யின் காரணமாக பாசன குளங்கள் கிடு கிடுவென நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. தற்பொழுது மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 33.49 அடியாக இருந்தது. அணைக்கு 992 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.05 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 239 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.79 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 33.46 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14.10 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. சுமார் 300 ஹெக்டேரில் தண்ணீர் மூழ்கி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்ததையடுத்து அந்த தண்ணீர் வடியத்தொடங்கியது. தற்பொழுது 111 ஹெக்டேரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியிலும் தேங்கி இருந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது.
தண்ணீர் வடிந்தாலும் ஒரு சில பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மாவட் டம் முழுவதும் ஏற்கனவே 5500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டது. தற்பொழுது 3500 ஹெக்டேரில் அறுவடை முடிந்திருந்த நிலையில் இன்னும் 1500 ஹெக்டேரில் அறுவடை செய்ய வேண்டியது உள்ளது. மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அறுவடைக்கு ஒரு மாத காலம் ஆகலாம்.
கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியதால் அறுவடை தாமதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கன்னிப்பூ அறுவடை நடைபெற்ற பகுதிகளில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். திருப்பதிசாரம் 3-ரக நெல்லை வேளாண் துறை அதிகாரிகள் தங்கு தடை இன்றி வழங்கி வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அறுவடை செய்யப்படாத பகுதியிலும் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அறுவடை நடைபெற்றவுடன் அந்த பகுதியில் நடவு பணியை மேற்கொள்ள வேறு விளை நிலங்களில் நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
- மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
குமரி மாவட்டத்திலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தினமும் நான்கு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.
முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, மேல்புறம், ராஜாக்கமங்கலம், முஞ்சிறை, கிள்ளியூர் உள்பட 9 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 11,594 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 33 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. தற்பொழுது டெங்கு அறிகுறியுடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.
- 60 வாகனங்களில் 120 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் சி.ஆர்.பி.எப் சார்பில் நடைபெறும் மகளிர் படையினருக்கான இரு சக்கர விழிப்புணர்வு பயணத்தின் துவக்க விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி முதல் கேவடியா வரையிலான இந்த பயணத்தில் 60 வாகனங்களில் 120 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் நாராயண சாமி, சி.ஆர்.பி.எப் ரவி தீப் சாஹி, சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது
- சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது.
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சா க்கடை திட்டப்பணிகள் மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. செட்டிகுளத்தில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைப் லைன்கள் அமைக்கப்ப ட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பகுதியில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டது. பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் 2 நாட்களாகியும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில் இன்று காலை கண்ணன் குளத்திலி ருந்து வடசேரி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. காலை 9 மணிய ளவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வந்த போது சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் பஸ்சில் முன் சக்கரம் சிக்கியது. இதையடுத்து டிரைவர் பஸ்சை இயக்க முயன்றார். அப்போது பஸ்சின் முன் சக்கரம் தொடர்ந்து பள்ள த்தில் புதைந்தது. மேலும் பஸ்சின் முன் பகுதியும் சாலையில் தட்டியதால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் நடுவழியில் நிறுத்தப்ப ட்டது. பஸ்சில் இருந்த பய ணிகள் இறக்கிவிட ப்பட்ட னர். மாற்று பஸ் மூல மாக அவர்கள் அனுப்பப்ப ட்டனர். பஸ் பாதாள சாக்கடை பள்ளத்தில் புதைந்து நின்றது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காலை நேரம் என்பதால் சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவ லகங்களுக்கு சென்றவர்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கி தவித்தனர். போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பள்ளத்தில் புதை த்த அரசு பஸ்சை மீட்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டது.
சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சாலையில் புதைந்த அரசு பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து பஸ் புதைந்த இடத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சாலையில் தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் மூலம் அடைக்க ப்பட்டது. இதனால் சாலை குறுகலாக காட்சியளித்தது. வாகனங்கள் அந்த பகுதி யில் ஊர்ந்து சென்றன. அதே பகுதியில் உள்ள பள்ளத்தில் ஆட்டோ ஒன்றும் சிக்கியது.
இதேபோல் செட்டிகுளம் சந்திப்பு பகுதியிலும் சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு 2 நாட்களாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், மாநக ராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் கம்பு ஒன்றை நாட்டி துணியை சுற்றி வைத்துள்ளனர். இந்த பிரச்சனைகள் தொடர்பு டைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக செட்டி குளம் பகுதியை ஆய்வு செய்து அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு நிரந்தர தீர்வாக பைப் லைன் அமைக்கப்பட்ட பகுதியில் சாலைகளை அப்புறப்படுத்தி விட்டு பைப்லைன் அமைக்க ப்பட்ட பகுதியின் மேல் காங்கிரீட் தளம் அமைத்து அத ன்பிறகு சாலை அமை க்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால்
- போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது
நாகர்கோவில் : குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட காவஸ்தலம், அரசமூடு, நாகக்கோடு போன்ற பகுதிகளில் ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறதுஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குலசேகரம் பேரூராட்சியில் புகார் செய்தார்கள். பேரூராட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஆடுகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க வேண்டும். சாலைகளில் தனியாக விட கூடாது என்று அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பினார்கள்.
ஆனால் சம்மந்தப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்கள் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் ரோட்டில் ஆடுகளை தனியாக விட்டார்கள். நேற்று குலசேகரம் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ரோட்டில் சுற்றி திரிந்த 2 ஆடுகளை பிடித்து பேரூராட்சியில் கட்டி போட்டார்கள். ஆட்டின் உரிமையார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி
- மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்
நாகர்கோவில் : கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி மாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் வழங்கினார் குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 28-ந்தேதி இரவு இவர்களது விசைப்படகு மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் கவிழ்ந்தது. இதில் 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீனவர்கள் ஆன்றோ (47), ஆரோக்கியம் (52), கொட்டில்பாடு பயஸ் (63) ஆகியோர் மாயமாகினர்.
இதில் பயஸ் உடல் 30-ந்தேதி மீட்கப்பட்டது. ஆன்றோ, ஆரோக்கியம் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இவர்களை உறவினர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் மாயமான மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் மற்றும் பலியான பயஸ் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் பயஸ், ஆரோக்கியம் ஆகியோரது குழந்தைகளின் மேற்படிப்புக்கான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். இதில் தி.மு.க. மாவட்ட மீனவர் அணி தலைவர் ஆன்றனி ராஜ் (எஸ்.கே.), செயலாளர் அனனியாஸ், துணை செயலாளர் ரூபன், குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்க தலைவர் வற்கீஸ், செயலாளர் பிராங்கிளின், துணை செயலாளர் ஆன்றனி, பொருளாளர் அந்திரியாஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், பனிக்குருசு, முன்னாள் கவுன்சிலர் சிபு மற்றும் விஜயன், மிரா ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
- கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
நாகர்கோவில் : தக்கலை அருகே கிருஷ்ண மங்கலம் அக்கர விளை பகுதியை சேர்ந்தவர் மணிசந்தர் (வயது 36). எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
மணிசந்தருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் மணிசந்தர் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் நிஷாந்தி கோபித்தில் குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனால் மன வருத்தம் அடைந்த மணி சந்தர் வீட்டுக்குள் சென்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணிசந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்மந்தமாக நிஷாந்தி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி சந்தர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தக்கலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரியா ஷைனி (வயது 28). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்
- கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.
நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர், மதுலகம் பகுதியை சேர்ந்தவர் பிரியா ஷைனி (வயது 28). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பணியை முடித்து விட்டு அவரது இருசக்கர வாகனத்தில், பயணம் காக்கர் அரங்கம் பக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் பிரியா ஷைனியின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.
இதனால் பதறிப்போன பிரியாஷைனி தாலி செயினை கெட்டியாக பிடித்துள்ளார். அப்போது அவரது கையில் 6½ பவுன் சிக்கி உள்ளது. குற்றவாளியின் கையில் 6½ பவுன் சிக்கி உள்ளது. உடனே பிரியாஷைனி திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் திருடனை துரத்தி சென்றுள்ளனர். ஆனால் இரவு நேரம் என்பதால் திருடனை பிடிக்க முடியவில்லை, இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது
- இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது
நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது. அந்த கல்லறைக்கு வழி சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தக்கலை சப்-கலெக்டருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவினரையும், தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைக்கு ஒரு தரப்பினார் ஆஜ ராகி உள்ளனர். மறு தரப்பினர் விசாரணைக்கு ஆஜரா காததால், ஆஜராகா தவர்களை பிடித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்த்தாண்டம் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த தங்கப்பன் என்பவரை பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தங்கப்பனின் ஆதரவாக ஒரு தரப்பினர், போலீஸ் நிலை யத்தில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர்.
- திங்கள்சந்தை பறையன் விளையை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). கூலி தொழிலாளி
- தனபால் (37) என்பவர் குடிக்க பணம் கேட்டுள்ளார்.
நாகர்கோவில் : திங்கள்சந்தை பறையன் விளையை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). கூலி தொழிலாளி. நேற்று மாலை சுமார் 3.45 மணியளவில் ராஜூ திங்கள்நகர் ரவுண்டானா நெய்யூர் ரோட்டில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெய்யூர் மிஞ்சன்தெருவை சேர்ந்த தனபால் (37) என்பவர் குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ராஜூ பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனபால் அவதூறாக ராஜூவை பேசியுள்ளார். இதை ராஜூ தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனபால் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ராஜூவை குத்தி உள்ளார். இதில் ராஜூ பலத்த காயம் அடைந்தார். மேலும் ராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயம் அடைந்த ராஜூவை அங்கி ருந்தவர்கள் மீட்டு குளச்சல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச் சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜூவின் சகோதரர் ஜெகதீஷ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய தனபாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில்
- புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது
நாகர்கோவில் :வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி யில் புதிய தொழில் நுட்ப கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செயற்கை தொழில் நுட்பம் மற்றும் தரவு அறிவியல் துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு மாதிரிகளை கண்காட்சிக்கு வைத்திருந்த னர்.இதனை பின்ஒஸ் மென் பொருள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்கு னரும் பொறியாளருமான அருண் ராஜிவ் சங்கரன் தொடங்கி வைத்து மாணவி களுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முறைகள் பற்றி பயிற்சியளித்தார்.
கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நுண்ணறிவு தொழில் நுட்பம் எதிர் காலத்தில் அனைவராலும் பயன்படுத்த கூடிய தொழில் நுட்பமாகும். எனவே மாணவிகள் இந்த தொழில் நுட்பத்தில் திறமை யை வளர்த்து கொண்டால் எதிர் காலத்தில் சிறந்து விளங்கலாம் என கூறினார்.
கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்தி பேசினார். மேலும் இந்த கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவி களுக்கு கேடயமும், சான்றி தழ்களும் மற்றும் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களும் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் தருண் சுரத், துறை தலைவி சுனிதா, நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் பேரா சிரியை செரினா மற்றும் பெனடிட் டோனா, பேரா சிரிய-பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
- அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
- ல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார்
நாகர்கோவில் : நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார். நூல் வெளியீட்டு விழாவில் ஜோதி ரவீந்திரன் எழுதிய " சிறகு முளைத்து பறக்கும் சமகாலக் கவிதைகள்" மற்றும் அழுதன் எழுதிய "வானத்தை குறி வையுங்கள்" ஆகிய 2 நூல்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் வெளியிட கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ஜோதி பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் கல்லூரி தமிழ்த்துறை முதல்வர் அலெக்சாண்டர், ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டெல்பின், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டி.பி.மோள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






