

நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர், மதுலகம் பகுதியை சேர்ந்தவர் பிரியா ஷைனி (வயது 28). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பணியை முடித்து விட்டு அவரது இருசக்கர வாகனத்தில், பயணம் காக்கர் அரங்கம் பக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் பிரியா ஷைனியின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.
இதனால் பதறிப்போன பிரியாஷைனி தாலி செயினை கெட்டியாக பிடித்துள்ளார். அப்போது அவரது கையில் 6½ பவுன் சிக்கி உள்ளது. குற்றவாளியின் கையில் 6½ பவுன் சிக்கி உள்ளது. உடனே பிரியாஷைனி திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் திருடனை துரத்தி சென்றுள்ளனர். ஆனால் இரவு நேரம் என்பதால் திருடனை பிடிக்க முடியவில்லை, இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.