குலசேகரம் பகுதி சாலைகளில் சுற்றி திரிந்த ஆட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம்

ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால்போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது
குலசேகரம் பகுதி சாலைகளில் சுற்றி திரிந்த ஆட்டின்  உரிமையாளர்களுக்கு அபராதம்
Published on

நாகர்கோவில் : குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட காவஸ்தலம், அரசமூடு, நாகக்கோடு போன்ற பகுதிகளில் ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறதுஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குலசேகரம் பேரூராட்சியில் புகார் செய்தார்கள். பேரூராட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஆடுகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க வேண்டும். சாலைகளில் தனியாக விட கூடாது என்று அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பினார்கள்.

ஆனால் சம்மந்தப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்கள் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் ரோட்டில் ஆடுகளை தனியாக விட்டார்கள். நேற்று குலசேகரம் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ரோட்டில் சுற்றி திரிந்த 2 ஆடுகளை பிடித்து பேரூராட்சியில் கட்டி போட்டார்கள். ஆட்டின் உரிமையார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com