என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி
    • இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் : அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி நாகர்கோவிலில் இன்று மாரத்தான் போட்டி நடந்தது. அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கிய இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 4 பிரிவுகளாக போட்டி நடந்தது.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மாரத்தான் போட்டியானது மணிமேடை வேப்பமூடு, கோர்ட்டு ரோடு, கலெக்டர் அலுவலகம், செட்டிகுளம், இந்து கல்லூரி கோட்டார், ஒழுகினசேரி வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. இதேபோல் 8 கிலோ மீட்டர் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தொடங்கி மணிமேடை வேப்பமூடு வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

    பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கோட்டார், மீனாட்சிபுரம் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை மாரத்தான் வந்தடைந்தது.

    மினி மாரத்தான் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரமும் வழங்கப்பட்டது.

    10 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டியில் முதல் பரிசை ஜோஸ் தட்டி சென்றார். 2-வது பரிசை அனீஸ் லியோன் என்பவரும், 3-ம் பரிசை மணிகண்டன் என்பவரும் பெற்றனர். 8 கிலோ மீட்டர் தூரம் ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை அகில்ராம், 2-வது பரிசை ஜெயராஜ், 3-வது பரிசை அஜய்குமார் ஆகியோர் பெற்றனர்.

    5 கிலோ மீட்டர் தூரம் ஓடிய 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை கோலி கிராஸ் கல்லூரி மாணவி ரம்யா தட்டி சென்றார். 2-வது பரிசை அதே கல்லூரி மாணவி ஹரிஷ்மாவும், 3-வது பரிசை அனிஷாவும் பெற்றனர்.

    25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை போலீஸ் துறையை சேர்ந்த ரஜிதாவும், 2-வது பரிசை கிருஷ்ண ரேகாவும், 3-வது பரிசை சலினாவும் பெற்றனர்

    • ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்க ளின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத் திற்கு செலுத்த வேண்டும்.
    • நிதியினை 31-1-2024-க்குள் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில் : நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணி கண்டபிரபு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறு வனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்க ளின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத் திற்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டிற்கான தொழி லாளர் நல நிதியினை 31-1-2024-க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலா ளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரி யத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரீ.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு ரூ.1000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித் தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலா ளர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கிறது.

    இந்த உதவித்தொகை யினை பெற தொழிலாளர்க ளின் மாத ஊதியம் ரூ.25 ஆயி ரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரி யத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31-12-2023 ஆகும்.

    விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணை யதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலா ளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.
    • பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.

    இதனால் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது. ஆகய தாமரைகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் ஆகாயதாமரைகள் அகற்றம் பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், கவுன்சிலர் சுபாஷ், புரவு தலைவர் பேராசிரியர் மகேஷ், தி.மு.க நிர்வாகி தாமரை பிரதாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே குவிக்கப்பட்டுள்ளது
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

    நாக்கோவில் : குழித்துறை நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசியது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மார்த்தாண்டம் கீழ்பம்மம் அருகே உள்ள உரக்கிடங்கில் மத்திய அரசின் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் ஒதுக்கீட்டில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைக்கப்பட்டது. குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இந்த மையத்திற்கு கொண்டுவரப்பட்டு 45 நாட்களில் உரமாக்கப்படுகிறது.

    இந்த நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி திறந்து வைத்தார். ஆணையாளர் ராமத் திலகம் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பிரவீன் ராஜா, கவுன்சிலர்கள் பிஜு, ரத்தினமணி, அருள்ராஜ், சர்தார் ஷா, சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்
    • இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும்

    நாகர்கோவில் : திங்கள்நகரில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும். காலாண்டு தேர்வு மற்றும் தொடர் மழை விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறந்தது. வழக்கம்போல மாலை பள்ளியை மூடிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அலுவலக ஊழி யர்கள் பள்ளியை திறக்க வந்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியை லில்லிபாய் தலைமை ஆசிரியர் அறை கதவு பூட்டு உடைந்த நிலையில் அருகில் ஒரு கடப்பாரை கம்பியும் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பைல்கள், ஆவணங்கள் சிதறிய நிலையில் கிடந்தது. மேலும் பள்ளி அறை சாவி கொத்தையும் மர்ம நபர்கள் மேசையில் எடுத்து வைத்திருந்தனர். இதுகுறித்து லில்லிபாய் தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியை எமிலியா ஜெசி ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியை விடுப்பில் இருப்பதால் இதுகுறித்து எமிலியா ஜெசி இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் இன்ஸ் பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

    திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன் நேரில் சென்று ஆசிரியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். போலீஸ் விசாரணையில் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆரை மர்ம நபர்கள் திருடிச் சென்றி ருந்தது தெரிய வந்தது.

    பீரோவில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லாத தால் மர்ம நபர்கள் ஏமாற்றத் துடன் சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பள்ளியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
    • கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது

    நாகர்கோவில் : கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச உரிமைகள் கழக தலைவரும் சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான அசோக்குமார் தலைமை தாங்குகிறார். எம்.செந்தில் குமார், தினேஷ் குமார், சந்திர செல்வம், நாகேந்திரன், பி. செந்தில் குமார், சிவா, செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ் வரவேற்று பேசுகிறார்.

    சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பச்சைமால், சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தாஸ், ரமேஷ் , நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி.செந்தில்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நஜிமுதீன், ஸ்டாலின், கிங்ஸ்லி ஜெரால்டு , ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண்
    • கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.


    தக்கலை, அக்.7-

    குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண் (வயது 15). இவன் கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த தருண், நண்பர் மேத்யூ ஜோஸ் என்பவருடன் தக்க லை அருகே மருந்துகோட்டை பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு மோட் டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும் பிய போது, சித்திரங்கோடு அருகே ரோட்டில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் தருணுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை தருண் பரிதாப மாக இறந்தார்.

    இது சம்பந்தமாக தருணின் தந்தை, கொற்றி கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக் கிளை ஓட்டிய மேத்யூ ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். தருண் உடல் பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. விடுமு றைக்கு வந்த நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • நடிகர் விக்ரம் பிரபு நடித்த இறுகப்பற்று திரைப்படம்
    • நாகர்கோவில் ஸ்ரீகார்த்திகை திரையரங்கில் திரையிடப்பட்டது

    என்.ஜி.ஓ.காலனி, அக்.7- நடிகர் விக்ரம் பிரபு நடித்த இறுகப்பற்று திரைப்படம் நாகர்கோவில் ஸ்ரீகார்த்திகை திரையரங்கில் திரையிடப்பட்டது. அதன் முதல் நாள் நிகழ்ச்சியில் திரைப்படத்தை பார்த்து கண்டுகளிக்க வந்த ரசிகர்களை குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை தலைவர் சி.டி.ஆர். சுரேஷ் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு மன்ற தலைவர் கருத்திருமன், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை துணை செயலாளர்கள் சத்யன், சுகுமாரன், பணிஜெஸ்டஸ், செயற்குழு உறுப்பினர் ரஞ்சித்குமார், ராம்குமார் மற்றும் குமரி மாவட்ட விக்ரம் பிரபு மன்ற நிர்வாகிகள் சுரேஷ், சுரேந்திரன், நாகராஜ பிரபு, சரலூர் ஜெகன், தேவராஜ்குமார், பாஞ்சாலி மற்றும் குமரி மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகிகள், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள், குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில்
    • பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது


    நாகர்கோவில் : குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னித் தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோணசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பால விளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய பகுதி களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப் பட்டு வருகிறது.
    • டவுன் ரெயில் நிலையத்தில் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நெல்லை யிலிருந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டவுன் ரெயில் நிலையத்தில் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பாசஞ்சர் ரெயில்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் செல்வதற்கு டவுன் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. தற்பொழுது ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டது.

    தற்பொழுது நுழைவு வாயிலில் மேல்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத கம்பிகள் அமைக்கப்பட்டு கூரை அமைக்கப்படுகிறது. நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் டவுன் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட் பாரங்கள் அமைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் 3-வது பிளாட்பா ரம் அமைப்ப தற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 1-வது பிளாட் பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பா ரத்திற்கு பொது மக்கள் செல்ல வசதியாக லிப்ட் வசதி அமைப்பதற்கு ஏற்கனவே டெண்டர் பிறப் பிக்கப்பட் டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே உள் ளது. கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ள னர். இது குறித்து ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் அங்கு பொதுமக்கள், பயணி களுக்கு தேவையான அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    ரெயில் நிலைய பகுதி களில் போதுமான தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. பொதுமக்கள் பஸ்கள் இல்லாமல் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் நலன்கருதி கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை வசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ள தாக இருக்கும் என்றார்.

    • கல்லூரி விடுதியில் சோதனை செய்த போலீசார், சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
    • ஒரு பேராசிரியர், மனதளவிலும், உடல் அளவிலும் தொல்லை கொடுத்ததாக கடிதத்தில் சுஜிர்தா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி.நகரைச் சேர்ந்த வியாபாரி சிவகுமார் மகள் டாக்டர் சுஜிர்தா (வயது27), முதுநிலை எம்.டி பயிற்சி டாக்டராக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் மாணவியர்களின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    நேற்று அவர் கல்லூரிக்கு காலையில் வராததால், சக மாணவிகள் மதியம் விடுதி அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுஜிர்தா மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் வந்து பார்த்து பரிசோதனை செய்தனர். அப்போது சுஜிர்தா இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருப்பதாக கூறப்பட்டது.

    இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்து சுஜிர்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் முதுகலை படிக்கும் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (குலசேகரம்), ஜானகி (திருவட்டார்) மற்றும் போலீசார் சுஜிர்தா தற்கொலை செய்த விடுதி அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மகள் தற்கொலை குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கபட்டிருந்த சுஜிர்தா உடலைப் பார்த்து கதறி அழுதனர்.தொடர்ந்து சிவகுமார், குலசேகரம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    "எனது மூத்த மகள் சுஜிர்தா, சென்னையில் தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து டாக்டரானார். பின்னர் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் முதுநிலை எம்.டி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கல்லூரி நிர்வகத்தில் இருந்து போன் வந்தது.

    உங்கள் மகள் சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது என போனில் பேசியவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

    உடனே குடும்பத்தினருடன் கிளம்பி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி வந்தோம். அங்கு வந்து பார்த்த போது எனது மகளின் உடலை பிணவறையில் வைத்து இருந்தனர். அவளது மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதில் உள்ள மர்மங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரனை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சூழலில் கல்லூரி விடுதியில் சோதனை செய்த போலீசார், சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ஒரு பெண் பேராசிரியை உள்பட 3 பேராசிரியர்கள் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாக சுஜிர்தா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ஒரு பேராசிரியர், மனதளவிலும், உடல் அளவிலும் தொல்லை கொடுத்ததாக கடிதத்தில் சுஜிர்தா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டிருக்கலாமா? அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜானகி மற்றும் போலீசார், ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி சென்று இன்று காலை விசாரணை நடத்தினர். சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்துடன் சென்ற அவர்கள், அதில் குறிப்பிட்டிருந்த 3 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    • நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்க குமரி மாவட்ட தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பதிவு செய்யும் வகையில் சில தளர்வுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் சொந்த வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக திருமணம், படிப்பு, தொழில், மருத்துவ தேவைகள் ஆகியவைகளுக்கு கூட நிலங்களை விற்க முடி யாத நிலை உள்ளது. 2016-க்கு பிறகு வாங்கிய நிலங்களை பிரிப்பதற்கோ, விற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 22-ஏ என்கிற பெயரில் ஏழை, எளிய மக்கள் வாங்கிய இடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் மறு பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனை தளர்வு படுத்தி ஏழை, எளிய மக்களின் நலனை கருதி பத்திரப்பதிவை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×