தலக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
தலக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்
Published on

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.

இதனால் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது. ஆகய தாமரைகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் ஆகாயதாமரைகள் அகற்றம் பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், கவுன்சிலர் சுபாஷ், புரவு தலைவர் பேராசிரியர் மகேஷ், தி.மு.க நிர்வாகி தாமரை பிரதாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com