என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள, செயற்குழு உருவாக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.பி.ஏ. சங்க தொடக்க விழா நடை பெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

    பாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் நிறுவன மனித வள வணிக பங்குதாரர் அப்ரார் வஸ்தா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் "வணிக வெற்றிக்கான மனப் பான்மையை உரு வாக்குதல்" என்ற தலைப்பில் தொழில்நுட்ப விளக் கத்தை வழங்கினார். இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ. மாணவி லின்சி புளோரன்ஸ் வரவேற்றார். தலைவர் உரையை முதல் வர் டாக்டர் ராஜேஷ் வழங்கினார். டாக்டர் பிரேம்சங்கரி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள, செயற்குழு உருவாக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அவர்களின் பதவிக் காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளை யும் நிறைவேற்றுவார்கள்.

    சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி ஆண்டு எம்.பி.ஏ. வகுப்பில் இருந்து ஒரு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் குழுவில் உள்ளனர். சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அஜிஷா, சங்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். துறைத்தலைவர் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அட்லின் ஜினோ நன்றி கூறினார்.

    • குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
    • போலீசார் திங்கள்நகர் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

    இரணியல்:

    குளச்சல் டி.எஸ்.பி. தங்க ராமன் உத்தரவுபடி போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் திங்கள்நகர் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டரிவிளை வழியாக வெள்ளிச்சந்தை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்சினை நிறுத்த கூறினார். ஆனால் மினி பஸ் டிரைவர் வாகனத்தில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறி நிறுத்தாமல் சென்றுள்ளார்.

    இதனை தொடர்ந்து போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் இரணியல் பகுதியில் மினி பஸ்சை மடக்கி பிடித்தார். அப்போது மினி பஸ்சை கல்லுக்கூட்டத்தை சேர்ந்த ஜெபின் (வயது 29) என்பவர் குடிபோதையில் இயக்கியது பிரீத் அனலைசர் கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மினி பஸ்சை பறிமுதல் செய்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் திங்கள்நகர் பேருந்து நிலையத்திலிருந்து யார் முதலில் புறப்பட்டு செல்வது என்பதில் மினி பஸ் ஓட்டுநர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு பயணிகள் முகம் சுழிக்கும் வண்ணம் அவதூறாக வசைபாடி வருவது அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் திங்கள் நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் குடித்து விட்டு பணிக்கு வந்து உள்ளனரா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் புறக்காவல் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக மினி பஸ் வெளியே செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
    • நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார்.

    என்.ஜி.ஓ.காலனி:

    பொற்றையடியில் இருந்து இலந்தையடி விளை தலக்குளம் வரை 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெங்கலராஜன் கோட்டை சானல் உள்ளது. இது வடக்கு தாமரைகுளம், கரும்பாட்டூர் மற்றும் சாமிதோப்பு ஆகிய 3 ஊராட்சிகள், தென்தாமரைகுளம் பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிகளுக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதிக்காகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பேச்சிப்பாறை அணையில் இருந்து பொற்றையடி வழியாக தலக்குளம் வந்தடைகிறது.

    இந்த வெங்கலராஜன் கோட்டை சானலில் சில பகுதிகளில் ஆகாயத்தாமரை மற்றும் பாசிகள், செடி, கொடிகள் அடைந்து தண்ணீர் வருவதற்கு இடையூறாக காணப்பட்டது. இந்த பாசிகளை அகற்றும் பணிகளை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கடற்படை பிரிவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தூய்மைப்படுத்தினர். இப்பாசிகளை அகற்றும் நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் டி.சி.மகேஷ் தொடங்கி வைத்தார். விவேகானந்தா கல்லூரியின் கடற்படைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபு மாறச்சன் தலைமை தாங்கினார். இதில் கங்காதரன், மணிக்கண்ணன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • பிரச்சினையை தீர்ப்பதற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தோவாளை அருகே திடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை உள்ளது. இச்சாலையானது மிகவும் குறுகலாகவும், மிகவும் பழுதடைந்தும் காணப்பட்டு வருகிறது. இந்த சாலையானது நெடுஞ் சாலைத்துறையின் கிராம சாலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் சரி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை யினை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல் சிறமடம்-அனந்தனார் கால்வாய் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 கோடியே 98 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்த சாலை ஊராட்சி சாலையாக ஆக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான நிதி யினை அரசு ஒதுக்கி பணி யினை தொடங்கிட வேண்டும்.முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும் இதன்பேரில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட கலெக்டரிடம் விவரங்கள் தெரிவிக்க கூறப்பட்டிருந்தது. இதில் அரசு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் கொண்டு வரப்பட வில்லை. அஞ்சுகிராமம், பால்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்கப் பெறவில்லை. இப்பிரச்சினையை தீர்ப்ப தற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோன்று ஈசாந்தி மங்கலம் பகுதியில் தற்போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரு கின்ற வீடுகளுக்கு குடி தண்ணீர் வசதி முறையாக செய்யப்பட வேண்டும். தோவாளையில் கட்டப்பட்டு வருகின்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணி மண்டப பணிகளை விரைந்து கட்டி முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கப்பல் மூலம் தேட முடிவு
    • 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47), அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். 28-ந்தேதி நள்ளிரவு ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகியோர் சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் எதிர்பாராமல் திடீரென கடலில் மூழ்கியது. இதனால் கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது.

    இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாயமான ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸை நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில், கொட்டில்பாடு மீனவர் பயஸின் உடல் கடந்த 30-ந்தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய இருவர்களை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீனவர் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கோஸ்டல் கார்டும் மீனவர்களை தேடி வருகின்றனர். ஆனால் 2 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கொச்சி கப்பற்படையிலிருந்து கப்பல் வரவழைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கப்பற்படை அதிகாரிகள் மணப்பாடு கடல் பகுதி விசைப்படகு மூழ்கிய பகுதியில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். கப்பல் தேடும் பணியை தொடங்கும் முன் அங்கு ஆய்வு நடத்தப்படுவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று அல்லது நாளை கொச்சியிலிருந்து கப்பல் மணப்பாடு கடல் பகுதிக்கு செல்லும் என துறைமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் மீட்கப்படாதது மீனவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
    • குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே சொத்த விளை ஒசரவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63). இவர் வடசேரியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து செந்திலுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் செந்திலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவிலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் இன்று காலை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மீது குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. தாத்தா செந்தில், வெள்ளை செந்திலை தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் சுற்றி தெரியும் ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு போலீசார் அதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றசெயலில் ஈடுபடும் எந்த ரவுடியும் தப்பிக்க முடியாது என்றார்.

    • தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
    • போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

    திருவட்டார்:

    குலசேகரம் நாகக்கோடு பகுதியில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27), முதுநிலை பயிற்சி மயக்கவியல் துறை நிபுணராக 2-ம் ஆண்டு படித்து வந்தார். இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தாவின் அறை கதவு நேற்றுமுன்தினம் திறக்கப்படவில்லை.

    இதனால் சக மாணவிகள் தகவல் தெரிவித்ததையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது சுகிர்தா பிணமாக கிடந்தார். சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் போலீசாருக்கும், சுகிர்தாவின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னுடன் படித்த மாணவர் ஹரிஷ் மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து குலசேகரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மற்றும் ஹரிஷ், ப்ரீத்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன் நேரில் விசாரணை மேற்கொண்டார். நேற்று காலை தொடங்கிய விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இரவு 9.30 மணி வரை போலீசார் சுகிர்தாவுடன் படித்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட னர். மேலும் சுகிர்தா சம்பவத்தன்று யாருடன் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்பது குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளனர். இதற்கிடையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது தந்தை சிவக்குமார் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் பரம சிவம், ஹரிஷ், ப்ரீத்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணைக்கு பிறகு 3 பேரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    • திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
    • பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து விவேகா னந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு போக்கு வரத்திற்கு சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டில் பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. சொத்தவிளை பீச், வட்டக்கோட்டை பீச், முட்டம் பீச் பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர்கோவில் மாநக ராட்சி வேப்பமூடு பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சல்களில் குழந்தைகள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

    • குளச்சல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
    • ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரிக்கும் படத்தை வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கே.எஸ். அழகிரி அறிவுறுத்தலின் பேரில் தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக குளச்சல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் கே.டி. உதயம், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக்கு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் நடைபெற்றது.

    நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், தளவாய் சுந்தரம் உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஆஜராகாமல் உள்ளவர்கள் மீது கோர்ட்டு பிடிவாரண்டு
    • சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ந்து தலைமறைவா கவே இருந்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளவர்கள் மீது கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ந்து தலைமறைவா கவே இருந்து வருகிறார்கள்.

    எனவே தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்த ரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வாரண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் என்பவரை போலீ சார் கைது செய்துள்ளனர்.

    நாகர்கோவில் பெரு விளை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஒழுகினசேரியில் வைத்து கொலை செய்யப் பட்டார். இதுதொடர்பாக சொத்தவிளை ஒசர விளையை சேர்ந்த செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63) என்பவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த செந்திலுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டில் நடைபெற்ற விசாரணைக்கு செந்தில் ஆஜராகவில்லை. தலைமறைவாகிவிட்டார். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப் படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமை யிலான போலீசார் அவரை இன்று காலை கைது செய்த னர். கைது செய்யப்பட்ட அவரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைதான செந்தில் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ரவுடிகள் பட்டியலிலும் செந்தில் பெயர் இடம் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.

    • அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி
    • இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் : அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி நாகர்கோவிலில் இன்று மாரத்தான் போட்டி நடந்தது. அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கிய இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 4 பிரிவுகளாக போட்டி நடந்தது.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மாரத்தான் போட்டியானது மணிமேடை வேப்பமூடு, கோர்ட்டு ரோடு, கலெக்டர் அலுவலகம், செட்டிகுளம், இந்து கல்லூரி கோட்டார், ஒழுகினசேரி வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. இதேபோல் 8 கிலோ மீட்டர் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தொடங்கி மணிமேடை வேப்பமூடு வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

    பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கோட்டார், மீனாட்சிபுரம் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை மாரத்தான் வந்தடைந்தது.

    மினி மாரத்தான் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரமும் வழங்கப்பட்டது.

    10 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டியில் முதல் பரிசை ஜோஸ் தட்டி சென்றார். 2-வது பரிசை அனீஸ் லியோன் என்பவரும், 3-ம் பரிசை மணிகண்டன் என்பவரும் பெற்றனர். 8 கிலோ மீட்டர் தூரம் ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை அகில்ராம், 2-வது பரிசை ஜெயராஜ், 3-வது பரிசை அஜய்குமார் ஆகியோர் பெற்றனர்.

    5 கிலோ மீட்டர் தூரம் ஓடிய 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை கோலி கிராஸ் கல்லூரி மாணவி ரம்யா தட்டி சென்றார். 2-வது பரிசை அதே கல்லூரி மாணவி ஹரிஷ்மாவும், 3-வது பரிசை அனிஷாவும் பெற்றனர்.

    25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை போலீஸ் துறையை சேர்ந்த ரஜிதாவும், 2-வது பரிசை கிருஷ்ண ரேகாவும், 3-வது பரிசை சலினாவும் பெற்றனர்

    ×