என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக முத்துக்குமார் நியமனம்
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ஆரல்வாய்மொழி :

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் குமரி சட்ட மன்றத்தொகுதி உறுப்பின ருமான தளவாய்சுந்தரம் பரிந்துரையின்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமாரை நியமனம் செய்தார். இதையடுத்து புதியதாக நியமனம் செய்யப்பட்ட முத்துக்குமார் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பெருமாள்புரம் காமராஜர் சிலை, வடக்கூர் வ.உ.சி.சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் ஆரல்வாய்மொழி நகர செயலாளராக அறி விக்கப்பட்டுள்ள சுடலை யாண்டி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பால கிருஷ்ணன், கவுன்சிலர்கள் மோகன், மணி, கிளை செயலாளர்கள் அய்யப்பன், ராமலிங்கம், வக்கீல் லட்சுமி நாராயணன், இணை செயலாளர் பேச்சியம்மாள், தொழிற்சங்கம் மாசாணம், கச்சேரி நாகராஜன், சிவ சங்கரன், எபநேசர், அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
    • பாயின்ட் டூ பாயின்ட் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

    கருங்கல் :

    கருங்கல் பகுதிகளில் இருந்து தினந்தோறும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரி வோர், வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் நாகர்கோவில் சென்று வருகின்றனர். இவர்கள் காலையில் அலுவலக பணி நேரத்தில் சென்று சேரும் வகையிலும், மாலையில் பணி முடிந்தவுடன் ஊருக்கு வரும் வகையிலும் பாயின்ட் டூ பாயின்ட் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சி னால் கருங்கல், பாலூர், திப்பிரமலை, மத்திகோடு, மாத்திரவிளை, திக்கணங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா நோய் பரவி வந்த நேரத்தில் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கருங்கல்-நாகர்கோவில் பாயின்ட் டூ பாயின்ட் பஸ் நிறுத்தப்ப ட்டது. அதன்பின் கொரோ னா தொற்று விலகிய பின் நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களும் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால் கருங்கல் - நாகர்கோவில் பாயின்ட் டூ பாயின்ட் பஸ் மட்டும் திரும்ப இயக்கப்படவில்லை. அதனால் காலையில் இந்த பஸ்ஸை நம்பி பணிகளுக்கு சென்று வந்த அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே கருங்கல் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ள கருங்கல்-நாகர்கோவில் பாயின்ட் டூ பாயின்ட் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை
    • அனு பிரியா தனது கணவருக்கு தெரியாமல் 20 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி அனுபிரியா (வயது 32). அழகு கலைஞரான இவருக்கு திருவிதாங்கோடு பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்தப் பெண், மற்றொரு அழகு நிலையம் தொடங்குவதாக கூறி ரூ. 5 லட்சம் கேட்டாராம். இதனால் அனு பிரியா தனது கணவருக்கு தெரியாமல் 20 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தப் பெண் நகையை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அது கவரிங் நகை என அறிந்த அனுப்பிரியா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் 5 மாதமாக அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அனுபிரியா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது
    • தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    வீயன்னூர், பேச்சிப்பாறை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. எனவே, நாளை மறுநாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீயன்னூர் மின் நிலைய பகுதிகளான ஆற்றூர், திருவட்டார், செரும்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்று முகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்கா விளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய இடங்களுக்கும், பேச்சிப்பாறை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை கடை யாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கடையில் இருந்த பிஸ்கட், மிக்சர், பழங்கள் போன்றவற்றை தூக்கி கொண்டு சென்று விட்டது
    • வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் புகுந்து தண்ணீரை நாசம் செய்வதும் வழக்கமாக உள்ளது.

    தக்கலை :

    தக்கலை அருகே முளகுமூடு வெட்டுகாட்டு விளையில் சுமார் 200 வீடுகள் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான குரங்குகள் வீட்டுக்குள் வருவதும், பொருட்களை எடுத்து வீசுவதும் வழக்கமாக உள்ளது.

    குரங்குகள் முளகுமூடு பகுதியில் ஒரு பெண் நடத்தி வரும் கடையில் இருந்த பிஸ்கட், மிக்சர், பழங்கள் போன்றவற்றை தூக்கி கொண்டு சென்று விட்டது. இதை கண்ட அந்த பெண் கையில் வைத்திருந்த கம்பால் விரட்டியதும் அந்த பெண்ணை கடிக்க ஓடி வந்தது.

    இதுபோல் பல வீடுகளி லும் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மீதும் இந்த குரங்குகள் அச்சுறுத்தி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஸ்டா லின்ஜோஸ் கூறியதாவது:-

    இந்த பகுதியில் தினமும் ஏராளமான குரங்குகள் வந்து பொருட்களை எடுத்து செல்வதும் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் புகுந்து தண்ணீரை நாசம் செய்வதும் வழக்கமாக உள்ளது. வனத்துறை இப்பகுதியில் கூண்டு வைத்து அனைத்து குரங்குகளையும் பிடித்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகர்கோவில் விதை பரிசோதனை நிலைய அலுவலர் அறிவுரை
    • நெல் விதைகளின் ஈரப்பதம் 12 முதல் 13 சதவீதம் வரை உலர வைக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுது நெல் அறுவடை ஆரம்பித்து உள்ளதால் விதை பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வண்ணம் அறுவடை செய்வது மிகவும் இன்றியமையாததாகும். அதற்கு விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் விதைகளின் தரத்தினை கெடாமல் பாதுகாக்கலாம். பயிர் அறுவடை செய்யும் எந்திரத்தினை நன்கு சுத்தம் செய்து பின்னரே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்த பிற ரக நெல் மணிகள் ஏதேனும் எந்திரத்தில் இருக்ககூடாது.

    முதலில் அறுவடை செய்யபடும் விதைகளை விதைக்கு அல்லாத (தானியம்) உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டும். அறுவடை செய்த விதைகளை புதிய கோணிப்பைகளில் பிடித்துகொள்ள வேண்டும். அறுவடை செய்த விதை குவியல்களை நன்கு சுத்தம் செய்த களங்களில் உலர வைக்க வேண்டும். உலர வைக்கும்போது காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள்ளும், பிற்பகல் 3 மணிக்கு மேல் 5 மணிக்குள் மட்டுமே உலர வைக்க வேண்டும். உச்சி வேளை வெயிலை தவிர்ப்பது நல்லது.

    விதைகளின் ஈரப்ப தத்தை படிப்படியாக குறைத்து நெல் விதைகளின் ஈரப்பதம் 12 முதல் 13 சதவீதம் வரை உலர வைக்க வேண்டும். சரியாக காய்ச்சல் வந்ததை அறிய ஒரு நெல் மணியை கடித்து பார்க்கும்போது, அது 2 துண்டாக பிளவுபட வேண்டும். நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப்பைகளில் பிடித்து விதைகளின் ரகம் குறித்து எழுத வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களின் சாகுபடி செய்து இருந்தால் ஒவ்வொரு ரகத்தினையும் தனித்தனியாக வைக்க வேண்டும். ஒரு ரகத்துடன் மற்றொரு ரகம் கலக்காதவாறு சேமித்து வைக்க வேண்டும். இதில் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விதைக்கு வியல்கள் தரமானதாகவும் எளிதில் தேர்ச்சி பெறும் விதைகளாகவும் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இரணியல் :

    தூத்துக்குடி மாவட்டம் செட்டிவிளை மணல் மாதா கோவில் பகுதியை சேர்ந்த வர் குருசுமிக்கேல். இவரது மகள் அருட் சகோதரியான ஜெயசெல்வி (வயது 37). இவர் குமரி மாவட்டம் திங்கள்நகர் அடுத்த பட்டரிவிளை ஏசுவின் திரு இருதய கன்னியர்மடத்தில் தங்கி பட்டரிவிளை உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் பட்டரிவிளை யிலிருந்து பள்ளவிளை நோக்கி திருப்பலிக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து மினி பேருந்து ஒன்று புதுவிளை பகுதியில் வைத்து ஜெயசெல்வி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் துடிதுடித்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயசெல்வி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.

    பின்னர் பிரேத பரி சோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீஸ் நிலையத்தில் அருட்சகோதரி ஞான செல்வி புகார் அளித்தார். புகாரின் பேரில் மினி பஸ்சை ஓட்டிய பிலாக்கேடு பகுதியை சேர்ந்த பாண்டி யன் (வயது 27) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆதித்யா சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார்.

    இரணியல்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆத்திவிளையை அடுத்த ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஶ்ரீ குமார். இவரது மகன் ஆதித்யா (வயது 16). இவர் மாங்குழி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் ஆதித்யா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசில் ஶ்ரீகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி மரணங்கள் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
    • பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் எடுத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு பாபநாச தீர்த்த குளம் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குப்பை, செடி, மரம் வளர்ந்து பராமரிப்பின்றி காட்சி அளித்து வந்தது. இந்த தீர்த்த குளம் தூய்மை செய்யும் பணிகள் கடந்த சில நாட்கள் முன்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

    தற்போது தீர்த்த குளம் நீரை மோட்டார் வைத்து எடுத்து வெளியேற்றி பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் எடுத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இப்பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும் அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    மகாதேவர் அய்யர் குழுவினர் உழவார பணிகளை செய்து வருகின்றனர். அப்போது கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மாணவி சுஜிர்தாவின் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
    • செல்போன் மூலம் மாணவி யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்.

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த பயிற்சி டாக்டர் சுஜிர்தா கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதி அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி டாக்டரின் தந்தை தூத்துக்குடி வியாபாரி சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி சுஜிர்தாவின் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில் 3 டாக்டர்களின் பெயர்களை எழுதி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. முதலில் கல்லூரியின் போராசிரியர் டாக்டர் பரமசிவம், பாலியல் தொந்தரவு செய்து உடல் ரீதியாகவும் மண ரீதியாகவும் தொந்தரவு செய்தாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் முதுகலை பயிற்சி டாக்டர்கள் ஷரிஷ், பிரித்தி ஆகியோரும் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், தக்கலை துணை சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் கடந்த 3 நாட்களாக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சுஜிர்தா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் புகார் கூறப்பட்டுள்ள பயிற்சி டாக்டர் ஹரிஸ், இங்கு இல்லை என்பதும் அவர் தனது சொந்த ஊரான சென்னையில் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் சென்னை சென்றுள்ளனர்.

    இதற்கிடையில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் பிரித்தி ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி நியமிக்கப்படுள்ளார். அவர் மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறை அவரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தி வருகிறார். செல்போன் மூலம் மாணவி யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்

    மேலும் கல்லூரி மாணவி தற்கொலை சம்பந்தமாக யாராவது தகவல் தெரிவிக்க விரும்பினால் 9498195077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டபத்தில் கலந்துகொள்ளும் மாவட்ட இளைஞரணி ஊழியர் கூட்டம்

    மார்த்தாண்டம் :

    குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 17-ந்தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டபத்தில் கலந்துகொள்ள இருக்கும் மாவட்ட இளைஞரணி ஊழியர் கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும், வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மகளிர் உரிமை மாநாடு ஆயத்த பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரெமோன், பப்புசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் டி.பி.ராஜன், வழக்கறிஞர் ராஜேஷ்குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், ஆனந்த ராஜன், மணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட் டார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமினம் செய்துள்ளார்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் நியமிக்கப்பட்டுள் ளார். அண்ணா தொழிற் சங்க செயலாளர் வைகுண்ட மணி, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் பா லமுருகன், சிறுபான்மை யினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ரசாக், அமைப்பு சாரா ஓட்டுநர் மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சந்திரன், கலை பிரிவு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன் ஆகியோர் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளராக முத்துக்குமார், அகஸ்தீஸ்வ ரம் வடக்கு ஒன்றிய செயலா ளர் ஜெஸீம், தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர். பொதுக்குழு உறுப்பி னராக மகாராஜா பிள்ளை, ராஜாக்கமங்கலம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளராக சிவ கந்தன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயலாளராக சுடலையாண்டி, தென்தா மரைகுளம் பேரூராட்சி செயலாளராக டானியல், மாநில மகளிர் அணி துணை செயலாளராக ராணி, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் தாணு பிள்ளை, மாநில இலக்கிய அணி இணை செயலாளராக சந்துரு என்ற ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். நாகர்கோவில் மாநக ராட்சி வடக்கு பகுதி செய லாளராக ஸ்ரீலிஜா நிய மிக்கப்பட்டுள்ளார். வடக்கு பகுதியாளராக நியமிக்கப் பட்டுள்ள ஸ்ரீலிஜா தமிழ கத்திலேயே அ.தி.மு.க.வில் முதல் பகுதி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×